வியாகாதம் (யோகம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய சோதிடத்தில் வியாகாதம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதின்மூன்றாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 160° 00' தொடக்கம் 173° 20' வரை "வியாகாதம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "வியாகாதம்" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "வியாகாதம்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.
சமசுக்கிருத மொழியில் வ்யாகத (Vyaghata) என்பது படுகொலை, கொல்லுதல் என்னும் பொருள் கொண்டது. மங்கலமற்றவை எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் சுக்கிரன். ஆட்சித் தேவதை வாயு.[1]
Remove ads
இதைப்பற்றி கூடுதலாக சொல்லவும்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads