வெளிமூச்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூச்சுவிடல் செயல்முறையில், உள்மூச்சினைத் (அல்லது உட்சுவாசத்தினைத்) தொடர்ந்து வெளிமூச்சு அல்லது வெளிச்சுவாசம் அல்லது மூச்செறிதல் (Exhalation) செயல்முறை நிகழும். இது ஓர் மந்தத்தன்மையுடைய செயல் ஆகும். இந்நிகழ்ச்சியில் காற்று நுரையீரலிலிருந்து வெளியேற்றப்படும். இதற்கென மார்பறையின் கொள்ளளவு குறைக்கப்படும். நுரையீரலினுள் காற்றழுத்தம் அதிகரிப்பதனால் இது நிகழும்.
வெளிமூச்சுப் பொறிமுறை
சுருக்கமடைந்திருந்த உதரவிதானத்தின் தசைகள் தளர்ச்சியடையும்போது, மேல்நோக்கி உயர்வதால் இயல்பான மேற்குவிந்த அமைப்புத் தோன்றும். அத்துடன் விலா எலும்புகளின் உள் விலா எலும்பிடைத் தசைகளின் சுருக்கத்தால், விலா எலும்புகளும் தமது இயல்பான நிலைக்குத் திரும்பும். அப்போது விலா எலும்புக்கூட்டின் கனவளவு குறையும். இதனால் உள்ளான அழுத்தம் வெளிச்சூழலை விட அதிகரிப்பதனால், காற்று உள்ளிருந்து வெளியே தள்ளப்படும்.[1][2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads