வெள்ளலூர் படுகொலை

வெள்ளலூர் கிராமத்தில் கிட்டத்தட்ட 5000 மக்கள் கொல்லப்பட்டதைக் குறிக்கிறது From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெள்ளலூர் படுகொலை (Vellaloor massacre) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்திற்கு அருகிலுள்ள வெள்ளலூர் கிராமத்தில் கிட்டத்தட்ட 5000 மக்கள் கொல்லப்பட்டதைக் குறிக்கிறது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இராணுவத் தளபதி ரம்லே இந்த படுகொலைக்கு உத்தரவிட்டார். கிழக்கிந்திய நிறுவனத்திற்கு வரி செலுத்த மறுத்ததால் பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை சென்னை அரசின் 1767 ஆண்டு அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் வெள்ளலூர் படுகொலை, இடம் ...
Remove ads

பின்னணி

நிறுவனத்திற்கு வரி செலுத்துவதை கள்ளர்கள் எதிர்த்தனர். இதனால் கேப்டன் ரம்லேயின் கீழ் ஐந்து படைப்பிரிவுகள் மற்றும் 1,500 குதிரைப்படைகள் அடங்கிய இராணுவ வீரர்கள் வரி வசூலிக்க அனுப்பப்பட்டனர். கிராமங்கள் தற்காப்பு நிலைகளை மேற்கொண்டு வரிகளை செலுத்த மறுத்தன. தளபதி ரம்லே கிராமத்திற்கு தீ வைக்குமாறு உத்தரவிட்டார். மேலும் தீயிலிருந்து தப்பிக்கும் அனைவரும் (ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்) கிழக்கிந்திய நிறுவனத்தின் சிப்பாய்களால் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக வெள்ளாலப்பட்டியில் 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் சுற்றியுள்ள பிற கிராமங்களை நிறுவனத்திற்கு அடிபணியச் செய்து தங்கள் வரிகளை செலுத்தச் செய்தது.

சிறுது காலத்திற்குப் பிறகு, கிழக்கிந்திய நிறுவனத்தின் அலுவலக உதவியாளர்கள் மீதான தாக்குதலை கள்ளர்கள் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து தளபதி ரம்லே மற்றொரு தாக்குதலுக்கு உத்தரவிட்டார். இதன் விளைவாக மேலும் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.[1][2][3][4][5]

Remove ads

பதிவுகள்

இந்த நிகழ்வுகளுக்கு முன்னதாக முஸ்லிம் மற்றும் பிரித்தானிய படையெடுப்பாளர்களுக்கு வரி செலுத்த மறுத்து பல கிளர்ச்சிகள் கள்ளர்களால் நடத்தப்பட்டது.

தமிழ்ச் சங்க இலக்கியம் உட்பட இந்திய பாரம்பரிய இலக்கியங்கள் மன்னர்களை ஒரு வழக்கமாக மட்டுமே மகிமைப்படுத்தியுள்ளன. எனவே சாமானிய மக்கள் மீதான இந்த படுகொலை அந்தக் காலத்தின் சமகால இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் நாட்டுப்புறக் கதைகளாகவும், சென்னை மாகாண அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் உள்ளது.[6]

Remove ads

கைது

தளபதி ரம்லே ஆரணியில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1783 ஆம் ஆண்டில் இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போரின் போது ஸ்ரீரங்கப்பட்டணத்திர்கு குடிபெயர்ந்தார் என்று பின்னர் குறிப்பிடப்பட்ட குறிப்புகள் தெரிவிக்கின்றன.[7][8][9][10][11]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads