ஸ்ரீரங்கப்பட்டணம்

From Wikipedia, the free encyclopedia

ஸ்ரீரங்கப்பட்டணம்map
Remove ads

சிரீரங்கப்பட்டணம் இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகராகும். மைசூர் நகருக்கு அருகில் அமைந்த இந்நகரம் சமய, பண்பாட்டு, வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும்.[1]

விரைவான உண்மைகள்

தீவு நகரமான சிரீரங்கப்பட்டணத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள் இயுனெசுகோவின் உலக பாரம்பரிய தளமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் அதன் பயன்பாடு இயுனெசுகோவின் தற்காலிக பட்டியலில் நிலுவையில் உள்ளது.[2]

Remove ads

அமைவிடம்

மைசூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இந்நகரம் உள்ளது. கிருட்டிணராச சாகர் அணைக்கட்டிலிருந்து வெளிவரும் காவிரி 8 கி.மீ. பயணித்து உண்டாக்கிய தீவில் இந்நகரம் உள்ளதால் இதை தீவு நகரம் எனலாம். காவிரியில் அமைந்த தீவுகளிலேயே இது தான் பெரிய தீவு ஆகும். மைசூரை பெங்களூருடன் இணைக்கும் தொடர் வண்டிப்பாதையும் சாலையும் இதன் ஊடாக செல்லுகின்றன.

சமய தொடர்பு

இங்கு அமைந்த அரங்கநாதசாமி கோயிலின் காரணமாகவே இந்நகருக்கு சிரீரங்கப்பட்டணம் என்ற பெயர் ஏற்பட்டது. அரங்கநாதசாமி இங்குள்ளதால் இந்நகரம் வைணவர்களின் புனித இடமாகவும் விளங்குகிறது. இங்குள்ள அரங்கநாதசாமி கோயில் கங்க மன்னர்களால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின் வந்த போசள மற்றும் விசய நகர அரசுகளால் மேலும் புணரமைக்கப்பட்டு அவர்கள் பாணி கட்டட கலையும் இக்கோயிலில் கலந்துள்ளது.

Thumb
சிரீரங்கப்பட்டணம் ஆரங்கநாதர் கோயில்

இங்குள்ள அரங்கனை ஆதிரங்கன் எனவும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் எனவும் திருவரங்கத்தில் உள்ள அரங்கனை அந்தியரங்கன் எனவும் அழைப்பர்.

Remove ads

வரலாறு

விசய நகரப் பேரரசின் கீழ் சிரீரீரங்கப்பட்டணம் சிறப்பு இடத்தை பெற்றிருந்தது. இங்கிருந்து அவர்கள் மைசூர் மற்றும் தலக்காடு போன்ற அரசுகளை நிர்வகித்தனர். பிற்காலத்தில் விசய நகரப் பேரரசின் பலம் குறைந்ததை கண்டு மைசூர் மன்னர் இராசா உடையார் விசய நகரப் பேரரசை எதிர்த்து அவர்களின் சிரீரங்கப்பட்டண தளபதி இரங்கராயரை தோற்கடித்து விசய நகர பேரரசிலிருந்து சுதந்திரம் அடைந்து மைசூர் பேரரசுக்கு அடிகோலினார். விசய நகர பேரரசின் தளபதியை தோற்கடித்த பிறகு 1610 ல் சிரீரீரங்கப்பட்டணத்தில் 10 நாட்களுக்கு தசரா திருவிழாவை கொண்டாடி தன் பலத்தையும் மைசூர் அரசின் சுயசார்பையும் பறைசாற்றினார்.

ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் காலத்தில் சிரீரங்கப்பட்டணம் அவர்களின் தலைநகராக விளங்கியது. திப்பு சூல்தானின் அரண்மனை மற்றும் சும்மா மசூதி ஆகியவை இந்திய இசுலாமிய கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளன.

Thumb
திப்பு சுல்தான் அருங்காட்சியகம்

சிரீரங்கப்பட்டண சமர் 1799

இது நான்காம் ஆங்கிலேய - மைசூர் போரின் கடைசி சமராகவும் அமைந்தது. இச்சமரின் போது ஆங்கிலப் படையை செனரல் ஆரிசு வழிநடத்தினார். திப்புவின் பிரதம மந்திரி சித்திக்கின் துரோகம் காரணமாக ஆங்கிலப்படைகள் குறைந்த எதிர்ப்புடன் எல்லைச்சுவரை கைப்பற்றினர். அடுத்ததாக குண்டு துகள்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நீர் புக வைத்ததால் அவை பயனற்று போயின. திப்புவின் மரணத்தோடு இப்போர் முடிவுக்கு வந்தது.

பஞ்சரங்க தலங்கள்

கோவில்அமைவிடம்
சிரீரங்கப்பட்டணம் அரங்கநாதர் கோயில்சிரீரங்கப்பட்டணம்
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருவரங்கம்
சாரங்கபாணி திருக்கோவில்கும்பகோணம்
கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்திருப்பேர்நகர் என்ற கோவிலடி
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில்மயிலாடுதுறை
Thumb
சிரீரங்கப்பட்டணத்திலுள்ள திப்பு சுல்தானின் கோடை கால அரண்மனை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads