வேசரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேசரம் என்பது இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலையமைப்பின் ஒரு பிரிவாகும்.[1] பொதுவாக இந்திய இந்துக் கட்டடக் கலைப்பாணிகளை நாகரம், வேசரம், திராவிடம் என்றும், தனியாக பல்வேறு கலைப் பாணிகளாக வகுத்துக் காட்டுவர்.[1] [2]
வேசர கலைப் பாணியில் அமைந்த கட்டுமானங்கள் பொதுவாக விந்திய மலைக்கும் துங்கபத்திரை நதிக்கும் இடையிலமைந்த நிலப்பகுதியிலேயே காணப்படும் என்று சிற்ப சாஸ்திர நூல்கள், ஆகமங்கள் என்பன குறிப்பிடுகின்ற போதிலும் அவற்றைப் பொதுவாக கர்நாடகத்து கட்டுமானங்களிலேயே காணமுடிகின்றது.
முற்காலத்து வாதாபிச் சாளுக்கியரின் கட்டடக் கலையினை மூலமாகக் கொண்டதாக இது அமைகின்றது. ஐகொளே, வாதாபி, பட்டதகல், ஆலம்பூர் ஆகிய நகரங்களில் கி.பி ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கற்றளிகள் பல அமையப்பெற்றுள்ளன. அவை நாகர, திராவிட மரபற்குரியவை. ஆனால், கல்யாணிச் சாளுக்கியரின் கட்டுமானங்கள் வேசர மரபிற்குரியன. அவற்றிலே நாகர கலைப்பாணி அருகிச் செல்லும் பாங்கினையும், திராவிட கலைப்பாணியின் மிளிரலையும் காணலாம்.
- குக்கனூர் கல்லேஸ்வரம்
- லக்குண்டி சமணக் கோயில்
- சௌத்தம்பூர் முக்தேஸ்வரம்
- லக்குண்டிக் காசி விஸ்வேஸ்வரம்
- இட்டகி மகாதேவர் ஆலயம்
- குருவட்டி மல்லிகார்ச்சுனர் கோயில் முதலனவை குறிப்பிடத்தக்கவை.
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads