வேதாந்தா ரிசோர்செசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேதாந்தா ரிசோர்சஸ் பிஎல்சி (Vedanta Resources plc, LSE: VED) அல்லது தமிழாக்கம் வேதாந்தா வளங்கள் பொதுவில் வரையறுக்கப்பட்ட நிறுவனம் சுரங்கத்தொழில் மற்றும் உலோகஙகளில் உலகளவில் ஈடுபடும் ஓர் நிறுவனமாகும். ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. இரும்பல்லாத உலோகங்களில் இந்தியாவின் மிகப்பெரும் சுரங்கங்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்திற்கு ஆத்திரேலியா மற்றும் சாம்பியாவில் சுரங்கங்கள் இருக்கின்றன.[2] முதன்மையான ஆக்கப் பொருட்களாக செப்பு, துத்தநாகம், அலுமினியம், ஈயம் மற்றும் இரும்புத்தாது உள்ளன.[2][3] இந்தியாவில் வணிகநோக்கில் மின் நிலையங்களை ஒரிசாவிலும் (2,400மெகாவாட்) பஞ்சாபிலும் (1,980 மெகாவாட்) அமைத்து வருகிறது. [4]
இலண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இதன் பங்குகள் ஃபுட்சி 100 குறியீட்டில் அங்கமாயுள்ளது.
Remove ads
குழுமம்
செப்பு
ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (இந்தியா) லிமிடெட்.: ஸ்டெர்லைட் தமிழ்நாட்டின் தூத்துக்குடியைத் தலைமையகமாகக் கொண்ட நிறுவனமாகும். 1988ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பொதுவில் பங்குகள் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உள்ளது. இதன் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளிலும் அமெரிக்க நியூயார்க் பங்குச் சந்தையில் ஏடிஎசுகளாகவும் பங்கேற்கின்றன. வேதாந்தா குழுமம் இந்த நிறுவனத்தில் 53.9% பங்குகளை கைக்கொண்டு நிறுவன மேலாண்மை பெற்றுள்ளது.
கொன்கோலா செப்பு சுரங்கங்கள்: 79.4% பங்குகளை உரிமைக்கொண்டு வேதாந்தா நிறுவன மேலாண்மையை பெற்றுள்ளது. சாம்பியா அரசிற்கு சொந்தமான சாம்பியா செப்பு சுரங்க முதலீடு நிறுவனம் பிற பங்குகளுக்கு உரிமையாளராக உள்ளது.
டாசுமானியா செப்புச் சுரங்கங்கள் (CMT): இந்நிறுவனம் டாசுமானியாவின் குயின்ஸ்டௌனில் தலைமையகம் கொண்டுள்ளது. 100% உரிமையுடன் நிறுவன மேலாண்மை கொண்டுள்ளது.
ஐசுவர்யா எண்ணெய் வயல்
இராசத்தான் மாநிலத்தில் பார்மர் மாவட்டத்தில் அமைந்த வேந்தாந்த குழுமத்தின் ஐசுவர்யா எண்ணெய் வயல்கள், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு என இது கருதப்படுகிறது. வேதாந்தா குழும நிறுவனங்களில் ஒன்றான கெய்ர்ன் ஆற்றல் நிறுவன நிர்வாகிகள் இந்த எண்ணெய் வயலை ஓர் 'உயிருள்ள தெய்வம்' என்று விவரிக்கிறார்கள்.[5][6] 2013 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஐசுவர்யா எண்ணெய் வயல் தனது உற்பத்தியைத் தொடங்கியது. ஒரு நாளைக்கு 30,000 பீப்பாய்கள் என்ற அளவில் இங்கு எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது.
15 சூன் 2021 முடிய எட்டு ஆண்டு காலத்தில் ஐசுவர்யா எண்ணெய் வயல் மூலம் 54 மில்லியன் பேரல் கச்ச எண்ணெய் எடுக்கப்பட்டுள்ளது. ஐசுவர்யா எண்ணெய் வயல் இந்திய நாட்டிற்கு $ 18 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயைக் ஈட்டிக் கொடுத்துள்ளது.[7]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads