வேல்சு பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

வேல்சு பல்கலைக்கழகம்
Remove ads

உவேல்சு பல்கலைக்கழகம் (University of Wales; (உவெல்சு: Prifysgol Cymru) என்பது ஐக்கிய இராச்சியம் உவேல்சு மாநிலத்தில் கார்டிஃப் நகரில் அமைந்துள்ள ஒரு கூட்டாட்சிப் பல்கலைக்கழகம் ஆகும். 1893 ஆம் ஆண்டில் அபெரிசுவித், பங்கோர், கார்டிஃப் ஆகிய மூன்று கல்லூரிகளின் கூட்டமைப்பில் அரச சாசனம் மூலம் இது ஆரம்பிக்கப்பட்டது. உவேல்சில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் இதுவாகும்.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...

2007 இல், உவேல்சு பல்கலைக்கழகம் நடுவண் அமைப்பில் இருந்து கூட்டாட்சி அமைப்புக்கு மாறியது. இதனால் இதனோடு இணைந்த கல்லூரிகள் சுயாதீனப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டன. 2000களின் பிற்பகுதியில் வெளிநாட்டுத் துணை நிறுவனங்கள், ஏமாற்றுதல் மற்றும் மாணவர் விசாக்கள்[2] போன்ற பல சர்ச்சைகளைத் தொடர்ந்து, இப்பல்கலைக்கழகத்தை அப்போது இருந்த அமைப்பின்படியே ஒழிக்க முடிவு செய்யப்பட்டது.

2017 ஆகத்து முதல், இப்பல்கலைக்கழகம் உவேல்சு டிரினிட்டி புனித தாவீது பல்கலைக்கழகத்துடன் செயல்பாட்டு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டது. உயர்கல்வி புள்ளியியல் நிறுவனம் 2018/19 இல் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள உவேல்சு பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை சுழியமாகப் பதிவு செய்துள்ளது,[3] ஆனால் 3,345 மாணவர்கள் ஐக்கிய இராச்சியத்துக்கு வெளியே உள்ள நாடுகடந்த கல்விப் படிப்புகளில் பதிவுசெய்துள்ளனர்.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads