வைத்தியலிங்கம் கோயில்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீஅன்னை யோகாம்பிகை வைத்தியலிங்கசுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் வழியில் 30 கி.மீ. (19 மைல்) தொலைவில் நல்லூர் புறநகர்ப் பகுதியின் ஆலடிப்பட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் கருவறையில் வைத்தியலிங்க சுவாமி மற்றும் தாயார் யோகாம்பிகை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
சுடலை மாடசாமி மற்றும் கருப்பண்ணசாமி தெய்வங்கள் பல்வேறு சாதியின மக்களால் தெய்வங்களாக வழிபடப்படுகின்றனர்.
Remove ads
குல தெய்வம்
ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமியை இப்பகுதி மக்கள் குலதெய்வமாக வழிபாடு செய்கின்றனர்.
வழி
திருநெல்வேலி - ஆலங்குளம் (Alangulam) - 30 கி.மீ.
ஆலங்குளம் (Alangulam) - ஆலடிப்பட்டி (Aladipatti) - 3 கி.மீ.
திருவிழாக்கள்
திருவிழா ஓராண்டிற்கு இரு முறை நடத்தப்படுகிறது. ஆவணி திருவிழா[1] மற்றும் பங்குனி (தமிழ் மாதம்) மாதத்தில் 10 நாள் திருவிழாவாக ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி மற்றும் யோகாம்பிகைக்கு திருவிழா நடத்தப்படுகிறது .இதில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.ஆனிதிருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசனத்திற்கு ஸ்ரீஆனந்த நடராஜாரக்கும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் கோபுர தீபாராதனை காட்டபடுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads