ஷிரின் காஞ்ச்வாலா
இந்திய வடிவழகி, நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஷிரின் காஞ்ச்வாலா (Shirin Kanchwala) என்பவர் ஒரு இந்திய வடிவழகி மற்றும் நடிகை ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் பணிபுரிகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக இவர் மிகவும் பிரபலமானார்.
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
ஷிரின் காஞ்ச்வாலா இந்தியாவின் மகாராட்டிராவின் மும்பையில் பிறந்தார். இவர் ஜெட் ஏர்வேசில் வானூர்தி பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.[1]
தொழில்
வழிவழகி மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டு, ஜெட் ஏர்வேசை விட்டு வெளியேறி வடிவழகி மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தினார். 2018 ஆம் ஆண்டில் கன்னடத் திரைப்படமான விராஜ் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து அதன்வழியாக திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.[2] 2019 ஆம் ஆண்டில், ரியோ ராஜ் மூலம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் வழியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.[3][4][5] பின்னர் சிபிராஜ் முன்னணி பாத்திரத்தில் நடித்த வால்டர் என்ற படத்தில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[6] அடுத்து இவர் நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் நடித்துவருகிறார். [7][8]
Remove ads
திரைப்படவியல்
![]() |
இதுவரை வெளியாகாத படத்தை குறிக்கிறது |
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads