ஸ்ரீ சாஸ்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீ சாஸ்தா பொறியியல் மற்றும் தொழிலுநுட்பக் கல்லூரி ( Sree Sastha Institute of Engineering and Technology ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், செம்பரம்பாக்கத்தில் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரியானது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி 1999 செப்டம்பர் 9 அன்று நிறுவப்பட்டது. [1]
Remove ads
கல்வி
இந்தக் கல்லூரியியல் ஏழு இளநிலை பொறியியல் படிப்புகள் (பி.இ.) வழங்கப்படுகின்றன. இரு இளங்கலை தொழில்நுட்ப (பி.டெக்.) படிப்புகள், எட்டு முதுநிலை படிப்புகளையும் வழங்கப்படுகிறது.
இக்கல்லூரியில் உள்ள கல்வித் துறைகள் [2]
1. இயந்திர பொறியியல்
2. மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல்
3. மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
4. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
5. எம்.இ. (அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்).
சேர்க்கை
இளங்கலைக்கு சேர்க்கப்படும் மாணவர்கள் அவர்களின் 12 ஆம் வகுப்பு (உயர்நிலை பள்ளி) மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். சேர்க்கையானது தமிழக அரசின் விதிமுறைகளின்படி மாநில அரசு ஆலோசனை மற்றும் நடைமுறைகள் மூலம் செய்யப்படுகிறது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads