ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம்

From Wikipedia, the free encyclopedia

ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம்map
Remove ads

ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் மேற்குத் தமிழ்நாட்டில் 480 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இதனை நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைப்பர். நரை அண‍ில் எனப்படும் மலை அணில் வகையைப் பாதுகாக்க 1989இல் துவக்கப்பட்டது. 8 பிப்ரவரி 2021 முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயத்தை புதிய சிறீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டது.[2][3][4]

விரைவான உண்மைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம், அமைவிடம் ...

Remove ads

அமைவிடம்

இவ் உய்விடம் விருதுநகர், மதுரை மாவட்டம், மேற்குப் பகுதியில் 480 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்உய்வகத்தின் மேற்கில் கேரளத்தின் பெரியாறு புலிகள் காப்பகமும், வடமேற்கில் மேகமலை காப்புக்காடும்,கிழக்கில் சிவகிரி காப்புக்காடும் சூழ்ந்துள்ளன.

பேணுதல்

இந்த சரணாலயத்தைப் பாதுகாக்க இடையூறாக இருப்பவை மனித ஆக்கிரமிப்பு, கால்நடைகளை வனப்பகுதியில் மேய்த்தல் மற்றும் காட்டுத்தீ ஆகியவையாகும். இதனுள் அமைந்துள்ள சில ஆன்மீக தலங்களுக்கு பல ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். இங்கு வேட்டையாடுதல் தடுக்கப்பட்டதால் சாம்பல் நிற அணில்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.[5]

புலிகளின் நடமாட்டம்

இங்கு புலிகளின் நடமாட்டம் அதிகரித்ததால் இதனைப் புலிகள் சரணாலயமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு விட்டது.[6]

உயிரினங்கள்

இங்கு நரை அணில், யானை, வேங்கைப் புலி, சிறுத்தை, வரையாடு, கடமான் அல்லது மிளா, கேளையாடு, முள்ளம்பன்றி, சோலைமந்தி, நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, தேவாங்கு உள்ளிட்ட பல வகை பாலூட்டிகள் இருந்தாளும், இங்குத் தென்படும் நரை அணிலே இந்த உய்விடத்தின் சிறப்பு. 220 வகை பறவையினங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 14 வகை ஓரிடவாழ்விகள் ஆகும்.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads