ஹொங் கொங் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹாங்காங் பல்கலைக்கழகம் ஹாங்காங்கில் உள்ள பொதுத் துறைப் பல்கலைக்கழகம் ஆகும். இது பொக்ஃபுலாம் நகரில் அமைந்துள்ளது. இது ஹாங்காங்கின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. [5]
மாந்தவியல், சட்டம், அரசறிவியல், உயிரியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பாடங்களை கற்பிக்கின்றனர். எல்லா பாடப்பிரிவுகளையும் ஆங்கிலத்தில் கற்பிக்கின்றனர்.
Remove ads
வளாகம்


முதன்மை வளாகம் 160,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது ஹாங்காங் தீவில் அமைந்துள்ளது.
துறைகள்
இந்த பல்கலைக்கழகத்தில் பத்து பிரிவுகள் உள்ளன.[6] அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகின்றன. [7]
- கட்டிடக்கலை
- கட்டிடக்கலைத் துறை
- நில வணிகம், கட்டுமானம்
- நகர்ர்ப்புறத் திட்டமிடல், வடிவமைப்பு
- நிலத்தோற்றவியல்
- கலை
- சீன மொழி
- ஆங்கிலம்
- மாந்தவியல்
- இலக்கிய ஒப்பீடுகள்
- கவின்கலை
- வரலாறு
- மொழியியல்
- இசை
- மெய்யியல்
- நவீன மொழிகளும் பண்பாடும்
- ஜப்பானிய மொழி
- அமெரிக்கா தொடர்புடைய படிப்பு
- ஐரோப்பா தொடர்புடைய படிப்பு
Remove ads
நூலகம்
இந்த பல்கலைக்கழகத்தின் நூலம், 1912-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஹாங்காங்கின் பழைமையான நூலகங்களில் இதுவும் ஒன்றூ. இங்கு 23 லட்சம் நூல்கள் உள்ளன. இவை தவிட, இணையவழியில் நூல்களையும், ஆய்வேடுகளையும் தேடும் வசதியும் உண்டு. முதன்மை நூலகத்தைத் தவிர, ஒவ்வொரு துறைக்கும் என மொத்தமாக ஆறு நூலகங்கள் உள்ளன.
மொழிக் கொள்கை
பல்கலைக்கழகத்தில் பாடங்களை ஆங்கிலத்தில் நடத்துகின்றனர். உள்ளூர் மாணவர்கள் ஆங்கிலத்தையும், சீன மொழியையும் கற்றிருக்க வேண்டும். சீன மொழியை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்களுக்கு வேறு பாடத்தை தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது. [8]
மாணவர்கள்
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வளர்ச்சி மையம் அமைத்துள்ளனர். இது மாணவர்களுக்கான கலந்தாய்வு, உடல்நலம் உள்ளிட்டவற்றை செய்து உதவும்.
- உயர்கல்வி, வேலைவாய்ப்பு
- தகவல் தொழில் நுட்ப சேவைகள்
- விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள்
- மருத்துவ வசதி
- கலை அருங்காட்சியகம்
மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளும் உள்ளன. மொத்தமாக 20 கட்டிடங்கள் உள்ளன.

சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads