ஆழ்வார்திருநகர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ஆழ்வார்திருநகர் (Alwarthirunagar) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். ஆழ்வார்திருநகர் அஞ்சல் குறியீடு 600087 மற்றும் தபால் தலைமை அலுவலகம் வளசரவாக்கம் ஆகும். இது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் தொகுதியில் உள்ள வளசரவாக்கம் நகராட்சியின் கீழ் வருகிறது. நகர் என்ற சொல் சமசுகிருதத்தில் ஒரு குடியேற்றத்தைக் குறிக்கிறது. 1960-களின் பிற்பகுதியில் சிட்டி லாண்டோ கார்ப்பரேசனால் இந்த பகுதி உருவாக்கப்பட்டது. பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டதன் மூலம், சென்னை மேற்கு திசையில் ஆழ்வார்திருநகர் ஒரு சேவை மையமாக உருவெடுத்தது.
Read article