ஆழ்வார்திருநகர்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

ஆழ்வார்திருநகர்map
Remove ads

ஆழ்வார்திருநகர் (Alwarthirunagar) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். ஆழ்வார்திருநகர் அஞ்சல் குறியீடு 600087 மற்றும் தபால் தலைமை அலுவலகம் வளசரவாக்கம் ஆகும்.[3] இது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் தொகுதியில் உள்ள வளசரவாக்கம் நகராட்சியின் கீழ் வருகிறது. நகர் என்ற சொல் சமசுகிருதத்தில் ஒரு குடியேற்றத்தைக் குறிக்கிறது. 1960-களின் பிற்பகுதியில் சிட்டி லாண்டோ கார்ப்பரேசனால் இந்த பகுதி உருவாக்கப்பட்டது. பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டதன் மூலம், சென்னை மேற்கு திசையில் ஆழ்வார்திருநகர் ஒரு சேவை மையமாக உருவெடுத்தது.

விரைவான உண்மைகள் ஆழ்வார்திருநகர், நாடு ...
Remove ads

அமைவிடம்

சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், ஆழ்வார்திருநகர் அமைந்துள்ளது.

சுற்றுப் பகுதிகள்

இராமகிருஷ்ணா நகர்

ஆழ்வார்திருநகரின் மையத்தில் ராமகிருஷ்ணா நகர் அமைந்துள்ளது. அங்கு, 1980-களில் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய மைதானம் உள்ளது, இது துடுப்பாட்டம் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், 2008 ஆம் ஆண்டில், புதிய கட்டுமானங்கள் இப்பகுதியில் உருவாக்கப்பட்டது மற்றும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு என்பது ஒரு பொதுவான பிரச்சினையாகும்.

வேலன் நகர்

வேலன் நகர் ஆழ்வார்திருநகர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவிலும், லமேச் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிலும் உள்ளது. 1980-களின் பிற்பகுதியில், வேலன் நகர் மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் நீரால் பாதிக்கப்பட்டது. 1990-களில், இப்பகுதி மிகப் பெரிய குடியிருப்புப் பகுதியாக வளர்ந்தது.

பழனியப்பா நகர்

ஆற்காடு சாலை மற்றும் இராதாகிருஷ்ணன் சாலை ஆகிய இடங்களில் இருந்து தெருக்களை இணைக்கும் பழனியப்பா நகர், ஆழ்வார்திருநகரை ஒட்டியுள்ளது.

மீனாட்சி அம்மன் நகர்

மீனாட்சி அம்மன் கோயில், இராமர் கோயில், கடம்பாடி அம்மன் கோயில், பிள்ளையார் கோவில் ஆகியவை மீனாட்சி அம்மன் நகரில் உள்ளது.

Remove ads

கல்வி நிறுவனங்கள்

  • லா சடலைன் ஜூனியர் கல்லூரி
  • செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி.
  • சிறீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • லாமேச் பள்ளி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads