பட்டம் (திருவனந்தபுரம்)
திருவனந்தபுரத்தின் புற நகர்பகுதிபட்டம் (Pattom) என்பது கேரளத்தின் திருவனந்தபுரம் நகரத்தின் நெரிசலான ஒரு வணிகப் பகுதியாகும். இது தம்பனூரின் மையத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ளது. பட்டம் பெரும்பாலும் குடியிருப்புப் பகுதியாகும். கேரள மாநிலத்தின் சில முக்கியமான நிருவாக அலுவலகங்கள் மற்றும் சில வணிக வளாகங்களும் இங்கு உள்ளன. இங்கு கேரள பொது சேவை ஆணையம், கேரள மாநில திட்டமிடல் வாரியம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், திருவனந்தபுரம் பிரதேச அலுவலகம், எல்ஐசி வீட்டுவசதி நிதி லிமிடெட், மாநில வள மையம், மாவட்ட ஊராட்சி தலைமையகம், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமையகம், கேரள கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (மில்மா), ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிராந்திய அலுவலகம் மற்றும் கேரள மாநில மின்சார வாரியம் ஆகியவற்றின் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. மேலும் போக்குவரத்து காவல்துறை மற்றும் தொலைத்தொடர்புத் துறை, கேரள அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் தலைமையகம் ஆகியவற்றின் அலுவலகங்களும் பட்டத்தில் அமைந்துள்ளன.






