பட்டம் (திருவனந்தபுரம்)
திருவனந்தபுரத்தின் புற நகர்பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டம் (Pattom) என்பது கேரளத்தின் திருவனந்தபுரம் நகரத்தின் நெரிசலான ஒரு வணிகப் பகுதியாகும். இது தம்பனூரின் மையத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ளது. பட்டம் பெரும்பாலும் குடியிருப்புப் பகுதியாகும். கேரள மாநிலத்தின் சில முக்கியமான நிருவாக அலுவலகங்கள் மற்றும் சில வணிக வளாகங்களும் இங்கு உள்ளன. இங்கு கேரள பொது சேவை ஆணையம், கேரள மாநில திட்டமிடல் வாரியம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், திருவனந்தபுரம் பிரதேச அலுவலகம், எல்ஐசி வீட்டுவசதி நிதி லிமிடெட், மாநில வள மையம், மாவட்ட ஊராட்சி தலைமையகம், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமையகம், கேரள கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (மில்மா), ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிராந்திய அலுவலகம் மற்றும் கேரள மாநில மின்சார வாரியம் ஆகியவற்றின் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. [1][2] மேலும் போக்குவரத்து காவல்துறை மற்றும் தொலைத்தொடர்புத் துறை, கேரள அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் தலைமையகம் (சாஸ்திர பவன்) ஆகியவற்றின் அலுவலகங்களும் பட்டத்தில் அமைந்துள்ளன.
திருவனந்தபுரம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் கிழக்குக் கோட்டையில் உள்ள நகர பேருந்து நிலையம் ஆகியவற்றிற்குச் செல்லும் பேருந்துகளுக்கு பட்டம் ஒரு முக்கிய நிறுத்தமாகும். இது திருவனந்தபுரத்தில் மிகவும் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றாகவும், வட கேரளத்திற்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 66 மற்றும் கௌடியர் அரண்மனைக்குச் செல்லும் சாலை உட்பட நான்கு சாலைகளின் சந்திப்புப் புள்ளியாகவும் உள்ளது. சங்குமுகத்தில் உள்ள திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 7 கி.மீ (4.3 மைல்) தொலைவிலும், திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையம் 4 கி.மீ (2.5 மைல்) தொலைவிலும் உள்ளது.
பட்டம் குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ சமூகத்தின் தாயகமாகும். [3] சிரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பசேலியோஸ் கிளேமிஸ் பாவா பட்டத்தில் உள்ள செயிண்ட் மேரி கதீட்ரலின் பேராயராகப் பணியாற்றியவர்.
Remove ads
குறிப்பிடத்தக்க மக்கள்
- பட்டம் தாணு பிள்ளை : 1960 முதல் 1962 வரை கேரளத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
- பட்டம் சதன் : திரைப்பட நடிகர்.
- டியான் ஜோசி ஷைன்
படத்தொகுப்பு
- பட்டம் தாணுபிள்ளை பூங்காவில் சித்திரைத் திருநாள் மன்னரின் சிலை
- பட்டம் வானளாவிகள்
- புனித மேரி கதீட்ரல், பட்டம்
- புனித மேரி கதீட்ரல், பட்டம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads