அந்திமனி
அணு எண் 51 கொண்ட நொறுங்கக்கூடிய வெள்ளி நிற உலோகம். வெப்பத்தையும் மின்சாரத்தையும் அரிதில் கடத்த / From Wikipedia, the free encyclopedia
ஆண்டிமனி (Antimony) என்பது Sb என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். அந்திமனி என்ற பெயராலும் அழைக்கப்படும் இத்தனிமத்தின் அணு எண் 51 மற்றும் அணு எடை 71 ஆகும். ஆண்டிமனி பளபளப்பான சாம்பல் நிறமுடைய ஒரு உலோகப் போலியாகும். இயற்கையில் இது சிடிப்னைட்டு (Sb2S3) எனப்படும் சல்பைடு கனிமமாகக் காணப்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே ஆண்டிமனி தனிமத்தின் சேர்மங்கள் அறியப்பட்டிருக்கின்றன, அவை பெரும்பாலும் தூளாக்கப்பட்டு மருந்து மற்றும் ஒப்பனைப் பொருட்களாக கோகல் என்ற அரபு மொழிப் பெயரில் பயன்படுத்தப்பட்டன [1] உலோக ஆண்டிமனி குறித்த செய்திகளும் அறியப்படுகின்றன. ஆனால் ஆண்டிமனி கண்டறியப்பட்ட தொடக்கக் காலத்தில் இது தவறுதலாக ஈயம் என்ற தனிமமாகப் பார்க்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளில் 1540 ஆம் ஆண்டில் ஆண்டிமனி பற்றிய விவரங்கள் வானோக்கியோ பிரிங்கியுக்கியோ என்ற உலோகவியலாளரால் எழுதப்பட்டுள்ளது.
| |||||||||||||||||||||||||
பொது | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
ஆண்டிமனி, Sb, 51 | ||||||||||||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை | உலோகப்போலி | ||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
15, 5, p | ||||||||||||||||||||||||
தோற்றம் | பளபளப்பான வெண்சாம்பல் | ||||||||||||||||||||||||
அணு நிறை (அணுத்திணிவு) | 121.760(1) g/mol | ||||||||||||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு | [Kr] 4d10 5s2 5p3 | ||||||||||||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) | 2, 8, 18, 18, 5 | ||||||||||||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||
இயல் நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | 6.697 கி/செ.மி³ | ||||||||||||||||||||||||
உருகுநிலையில் நீர்மத்தின் அடர்த்தி | 6.53 g/cm³ | ||||||||||||||||||||||||
உருகு வெப்பநிலை | 903.78 K (630.63 °C, 1167.13 °F) | ||||||||||||||||||||||||
கொதி நிலை | 1860 K (1587 °C, 2889 °F) | ||||||||||||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் | 19.79 கி.ஜூ/மோல் (kJ/mol) | ||||||||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் | 193.43 கி.ஜூ/மோல் | ||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (25 °C) 25.23 ஜூ/(மோல்·K) J/(mol·K) | ||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
படிக அமைப்பு | முச்சரி பருமச்செவ்வகம் rhombohedral | ||||||||||||||||||||||||
ஆக்சைடு நிலைகள் | −3, 3, 5 | ||||||||||||||||||||||||
எதிர்மின்னியீர்ப்பு | 2.05 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 834 kJ/(mol | ||||||||||||||||||||||||
2nd: 1594.9 kJ/mol | |||||||||||||||||||||||||
3rd: 2440 kJ/mol | |||||||||||||||||||||||||
அணு ஆரம் | 145 பிமீ | ||||||||||||||||||||||||
அணுவின் ஆரம் (கணித்) | 133 pm | ||||||||||||||||||||||||
கூட்டிணைப்பு ஆரம் | 138 pm | ||||||||||||||||||||||||
வேறு பல பண்புகள் | |||||||||||||||||||||||||
காந்த வகை | no data | ||||||||||||||||||||||||
மின் தடைமை | (20 °C) 417 nΩ·m | ||||||||||||||||||||||||
வெப்பக் கடத்துமை | (300 K) 24.4 வாட்/(மீ·கெ) W/(m·K) | ||||||||||||||||||||||||
வெப்ப நீட்சி | (25 °C) 11.0 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K) | ||||||||||||||||||||||||
ஒலியின் விரைவு (மெல்லிய கம்பி வடிவில்) | (20 °C) 3420 மீ/நொடி | ||||||||||||||||||||||||
யங்கின் மட்டு | 55 GPa | ||||||||||||||||||||||||
Shear modulus | 20 GPa | ||||||||||||||||||||||||
அமுங்குமை | 42 GPa | ||||||||||||||||||||||||
மோவின்(Moh's) உறுதி எண் | 3.0 | ||||||||||||||||||||||||
பிரிநெல் உறுதிஎண் Brinell hardness]] | 294 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||||||||||||
CAS பதிவெண் | 7440-36-0 | ||||||||||||||||||||||||
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
மேற்கோள்கள் |
சில காலம் சீனா ஆண்டிமனி மற்றும் அதன் சேர்மங்கள் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருந்து வந்தது. பெரும்பாலான உற்பத்தி ஊனானில் இருக்கும் சிக்குவான்சான் சுரங்கத்திலிருந்து கிடைத்தது. சிடிப்னைட்டு கனிமத்தை வறுத்தல் மற்றும் அதனுடன் கார்பன் அல்லது இரும்புடன் நேரடியாகச் சேர்த்து ஒடுக்குதல் செயல்முறைகளால் ஆண்டிமனியை தயாரித்தல் மற்றும் சுத்திகரிப்பதற்கான தொழில்துறை செயல்பாடுகள் நடைபெற்றன.
உலோக ஆண்டிமனியின் மிகப்பெரிய பயன்பாடுகளில் ஒன்றாக முன்னணி வகிப்பது இதனுடைய கலப்புலோகப் பண்பாகும். ஈயம் மற்றும் வெள்ளீயத்துடன் ஆண்டிமனியை கலந்து தயாரிக்கப்படும் கலப்புலோகம் அதிகமான பயன்களைக் கொடுக்கிறது. ஈயம்-ஆண்டிமனி கலப்புலோகத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் தகடுகள் ஈய – அமில மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இணைப்புலோகம், தோட்டாக்கள், சாதாரண தாங்கு உருளைகள் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஆண்டிமனி, ஈயம், வெள்ளீயம் தனிமங்களின் கலப்புலோகம் பயன்படுகிறது. ஆண்டிமனி சேர்மங்கள் பல வணிக மற்றும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களில் காணப்படும் குளோரின் மற்றும் புரோமின் வாயுக்களாலான தீயணைப்பு ஒடுக்கிகளில் முக்கிய கூட்டுப்பொருள்களாகப் பயன்படுகின்றன. மைக்ரோ மின்னியல் துறையில் ஆண்டிமனியைப் பயன்படுத்துவது வளர்ந்துவரும் ஒரு துறையாக மாறிவருகிறது.