இசுகந்தர் மலேசியா
தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம் / From Wikipedia, the free encyclopedia
இசுகந்தர் மலேசியா அல்லது இசுகந்தர் வளர்ச்சி மண்டலம் (மலாய்: Wilayah Pembangunan Iskandar; ஆங்கிலம்: Iskandar Malaysia அல்லது Iskandar Development Region (IDR); சீனம்: 馬來西亞依斯干達; ஜாவி: إسکندر مليسيا) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் அமைந்துள்ள வளர்ச்சி மண்டலம் ஆகும். தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம் (South Johor Economic Region) (சுருக்கம்: SJER) என்றும் அழைக்கப் படுகிறது.[1]
விரைவான உண்மைகள் இசுகந்தர் மலேசியா, நாடு ...
இசுகந்தர் மலேசியா | |
---|---|
வளர்ச்சி மண்டலம் Growth Corridor Metropolitan | |
Iskandar Malaysia Wilayah Pembangunan Iskandar | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டங்கள் | ஜொகூர் பாரு மாவட்டம் கூலாய் மாவட்டம் பொந்தியான் மாவட்டம் கோத்தா திங்கி மாவட்டம் |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 2.23 மில்லியன் |
• மதிப்பீடு (2025) | 3 மில்லியன் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 79xxx-82xxx, 86xxx |
மலேசியத் தொலைபேசி எண் | +607 (07-2, 07-3, 07-5, 07-6, 07-7 and 07-8) |
இணையதளம் | iskandarmalaysia.com.my |
மூடு
2006 நவம்பர் 6-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இது மலேசியாவின் முதல் பொருளாதார வளர்ச்சி மண்டலம் ஆகும். பல பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குக் கணிசமான அளவிற்கு வளர்ச்சியை வழங்கும் வகையில் இந்தப் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.