From Wikipedia, the free encyclopedia
இதய மின்கடத்துகை ஒருங்கியம் (Electrical conduction system of the heart) என்பது இதயத்தின் தசைப்பகுதிகளுக்கு மின்னோட்டம் மூலம் சமிக்ஞையை அனுப்பி இதயத்தசையை சுருங்கவைக்கும் திறனுடைய சிறப்பு இதயத்தசை உயிரணுக்களின் தொகுப்பைக் குறிக்கின்றது.[1] இதயத்தின் இயக்கம் இதயத் தசைகளால் ஏற்படுகின்றது. இதயத்தின் சுருங்கலையும் விரிவடைதலையும் சீரான நிலையில் பேணுவதற்கென சிரைப்பைச்சோணைக் கணு (Sinoatrial node), மேற்கீழறைக் கணு, கிசுவின் கட்டு மற்றும் அதனது கிளைகள், பேர்கிஞ்சி இழைகள் ஆகிய சிறப்பு இதயத்தசை உயிரணுத் தொகுதிகள் காணப்படுகின்றன.
இதய மின்கடத்துகை ஒருங்கியம் | |
---|---|
1. சிரைப்பைச்சோணைக் கணு (Sinoatrial node); 2. மேற்கீழறைக் கணு 3. கிசுவின் கட்டு 4. இடது கிசுக்கட்டுக் கிளை 10. வலது கிசுக்கட்டுக் கிளை | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | systema conducens cordis |
MeSH | D006329 |
TA98 | A12.1.06.002 |
FMA | 9476 |
உடற்கூற்றியல் |
ஆரோக்கியமான இதயம் நிமிடமொன்றிற்கு 70 - 90 தடவைகள் துடிக்கின்றது. சீரான இதயத்துடிப்பைப் பேணும் மின்கடத்துகை ஒருங்கியத்தில் முதன்மையானது சிரைப்பைச்சோணைக் கணு ஆகும். இது வலது இதய மேலறையில் மேற்பெரு நாளம் திறக்கும் இடத்தின் அருகாமையில் அமைந்துள்ள, முளையவியல் மீதி அமைப்பான சிரையப்பைப் (sinus venarum) பகுதியில் அமைந்துள்ளது (அதனால் சிரைப்பைச்சோணைக் கணு எனப் பெயரீடு பெற்றது [2] ). சிரைப்பைச்சோணைக் கணுவில் தொடங்கும் மின்சமிக்ஞைக் கணத்தாக்கவிசை இதயத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சீரான ஓட்டத்தில் பரவுகின்றது. இதன் காரணமாக முதலில் வலது, இடது இதய மேலறைகளும் அதன் பின்னர் கீழறைகளும் சுருங்குகின்றன. மேல் மற்றும் கீழ் இதயவறைகளுக்கு இடையேயான சுருங்கலில் உள்ள கால இடைவெளியானது இதய மேலறைகளில் இருந்து கீழறைகளுக்கு குருதி செலுத்தப்படுவதற்கு இன்றியமையாதது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.