இலாலா ருக் கல்லறை
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
இலாலா ருக் கல்லறை (Tomb of Lala Rukh) என்பது பாக்கித்தானின் ஹசன் அப்தாலில் உள்ள ஒரு வரலாற்று கல்லறை ஆகும். இது பாரம்பரியமாக முகலாய பேரரசர் அக்பரின் மகள் இளவரசி லாலா ருக் என்பவரின் கல்லறை எனக் கூறப்படுகிறது. [1] ஆனாலும் யார் இங்கு அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. [2]
இலாலா ருக்க்கின் கல்லறை | |
---|---|
இலாலா ருக்க்கின் கல்லறை | |
அமைவிடம் | ஹசன் அப்தால், பஞ்சாப், பாக்கித்தான் |
ஆள்கூற்றுகள் | 33°49′15.37″N 72°41′25.64″E |
பாக்கித்தானின் இன்றைய பஞ்சாபில், அட்டோக் மாவட்டத்தின் ஹசன் அப்தாலில் இஸ்லாம் ஷாஹீத் சாலையில் இந்த கல்லறை அமைந்துள்ளது. இந்த கல்லறை குருத்வாரா பஞ்சா சாஹிப் மற்றும் ஹக்கீம்களின் கல்லறைக்களுக்கு எதிரே உள்ளது. [3]
கல்லறையின் விளக்கங்களை வில்லியம் மூர்கிராஃப்ட், சார்லஸ் வான் ஹெகல், அலெக்சாண்டர் பர்ன்ஸ், ஜார்ஜ் எல்பின்ஸ்டோன் டால்ரிம்பிள் மற்றும் ஆலன் கன்னிங்ஹாம் ஆகியோரின் பயண நூல்களில் காணலாம்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.