ஐரோப்பிய ஆணையம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) நிறைவேற்று செயற்குழுவே ஐரோப்பிய ஆணையம் (European Commission) ஆகும் / From Wikipedia, the free encyclopedia
ஐரோப்பிய ஆணையம் (European Commission அல்லது EC) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று செயற்குழு ஆகும். இது சட்ட ஆலோசனைகளை முன்மொழிவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளை செயல்படுத்தவும், உடன்படிக்கைகளில் கைச்சாதிடவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அன்றாட நடவடிக்கைகளைத் திறம்பட செயல்படுத்தவும் உறுதுணை புரிகிறது.[2]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நிலை | ஐரோப்பிய ஒன்றிய நிறுவனம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Role | நிறைவேற்று அமைச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அமைப்பு | 1958 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தற்போதைய திணைக்களம் | பரோசோ ஆணையம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைவர் | ஒசே மனுவேல் பரோசோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1வது பிரதித் தலைவர் | கேத்தரின் ஆஷ்டன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மொத்த உறுப்பினர்கள் | 28 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அதிகாரபூர்வ மொழிகள் | ஆங்கிலம் பிரெஞ்சு இடாய்ச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பணியாளர்கள் | 23,000[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துறைகள் | 24 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | பிரசெல்சு, பெல்ஜியம் லக்சம்பர்க், லக்சம்பர்க் |
ஆணைக்குழுவானது அமைச்சரவை அரசாங்கத்தை போல "ஆணையாளர்கள்" என அழைக்கப்படும் 28 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது.[3]). ஒவ்வொரு அங்கத்துவ நாட்டிற்கும் தலா ஒரு பிரதிநிதி வீதம் இருப்பார். உறுப்பினர்கள் தங்களது சொந்த நாட்டு நலன்களை விட முழு ஐரோப்பிய ஒன்றிய நலன்களைப் பிரதிபலிக்கக் கடமைப்பட்டுள்ளனர். 28 நாடுகளில் ஒன்றின் பிரதிநிதியே ஆணையத்தின் தலைவர் (தற்போது ஜோஸ் மானுவல் டோரா பரோசோ) ஆவார். இவர் ஐரோப்பியப் பேரவையால் முன்மொழியப்பட்டு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன் பின்னர் ஐரோப்பியப் பேரவை ஐரோபிய ஆணையத்திற்குரிய ஏனைய 27 உறுப்பினரகளையும் பிரேரிக்கப்பட்ட தலைவரின் (ஆணையத்தின்) உதவியுடன் தெரிவு செய்யும். எனினும் இந்த 28 உறுப்பினர்களையும் கொண்ட ஆணையம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இறுதி முடிவின் பின்னரே அதிகாரபூர்வமாக நியமிக்கப்படும்.[4]
முதன் முறையாக பரோசோவின் ஆணையம் 2004ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர் ஆணையத்தின் வெற்றிக்கு வித்திட்ட பரோசோவே மீண்டும் ஆணையத்தின் தலைவராக 2010ஆம் ஆண்டில் பதவியேற்றார்.[5]
மொத்தமாக ஆணையத்தில் 24 திணைக்களங்கள் (Colleges) உள்ளன. பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நிர்வாகக் கட்டமைப்பில் ஏறத்தாழ 23,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.[6] இங்கு அதிகாரபூர்வ மொழிகளாக ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. ஆணையத்தின் முக்கிய காரியாலயம் பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரில் பெர்லேய்மொண்ட் கட்டடத்தில் அமைந்துள்ளது.