![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/61/Flag_of_Kelantan.svg/langta-640px-Flag_of_Kelantan.svg.png&w=640&q=50)
கிளாந்தான் மாநில ஆட்சிக்குழு
மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழு / From Wikipedia, the free encyclopedia
கிளாந்தான் மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Kelantan State Executive Council (EXCO); மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Kelantan (MMKN) என்பது மலேசியா கிளாந்தான் மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். கிளாந்தான் சுல்தான் அவர்களால் நியமிக்கப்பட்ட கிளாந்தான் மந்திரி பெசார் ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் கிளாந்தான் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.
கிளாந்தான் மாநில ஆட்சிக்குழு Kelantan State Executive Council Majlis Mesyuarat Kerajaan Negeri Kelantan | |
---|---|
![]() | |
2023–தற்போது | |
உருவான நாள் | 15 ஆகஸ்டு 2023 |
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | முகமட் நசுருதீன் டாவுட் பெரிக்காத்தான் (PN) பாஸ் (PAS) |
துணை அரசுத் தலைவர் | முகமட் பாட்சில் அசான் (PN–PAS) |
நாட்டுத் தலைவர் | சுல்தான் ஐந்தாம் முகமது |
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 11 |
உறுப்புமை கட்சி | பெரிக்காத்தான் (PN) |
சட்ட மன்றத்தில் நிலை | கூட்டணி அரசு 43 / 45 |
எதிர்க்கட்சித் தலைவர் | முகமது சியாபுதீன் ஆசிம் பாரிசான் நேசனல் (BN) – அம்னோ (UMNO) |
வரலாறு | |
Legislature term(s) | 15-ஆவது கிளாந்தான் மாநிலச் சட்டமன்றத் தொடர் |
கிளாந்தான் ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.
கிளாந்தான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கிளாந்தான் மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சுல்தானால் நியமிக்கப்படுகிறார்கள். கிளாந்தான் ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை; மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள்.