சாகிப்கஞ்சு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சாகிப்கஞ்ச், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் வடகிழக்கு முனையில் உள்ள சாகிப்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் கங்கை ஆற்றின் கரையில் உள்ளது. மாநிலத் தலைநகரான ராஞ்சிக்கு வடகிழக்கே 433 கிலோ மீட்டர் தொலைவில் சாகிப்கஞ்ச் உள்ளது. இந்நகரத்தில் சாகிப்கஞ்ச் கோட்டையைச் சுற்றிலும் ராஜ்மகால் மலைகளும், காடுகளும் உள்ளது.
சாகிப்கஞ்ச் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சாகிப்கஞ்ச் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25.25°N 87.65°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்கண்ட் |
மாவட்டம் | சாகிப்கஞ்ச் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4.25 km2 (1.64 sq mi) |
ஏற்றம் | 16 m (52 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,11,954 |
• அடர்த்தி | 26,000/km2 (68,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 88214 |
தொலைபேசி குறியீடு | 06436 |
வாகனப் பதிவு | JH-18 |
பாலின விகிதம் | 952 ♂/♀ |
இணையதளம் | sahibganj |
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 17,076 வீடுகள் கொண்ட சாகிப்கஞ்ச் நகரத்தின் மக்கள் தொகை 88,214 ஆகும். அதில் ஆண்கள் 46449 மற்றும் 41765 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12,262 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 79.21% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,1105 மற்றும் 2,618 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 71930, இசுலாமியர் 14681, கிறித்தவர்கள் 933 மற்றும் பிறர் 870 ஆகவுள்ளனர்.[1]
சாகிப்கஞ்ச் சந்திப்பு தொடருந்து நிலையம் மாநிலத் தலைநகரான ராஞ்சி மற்றும் அண்டை மாநிலங்களுடன் இணைக்கிறது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.