சில்க் ஏர்
From Wikipedia, the free encyclopedia
சில்க் ஏர் (சிங்கப்பூர்) வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் (SilkAir (Singapore) Private Limited) [3] (சீனம்: 勝安航空 Shèngān Hángkōng) சிங்கப்பூரிலிருந்து இயங்கும் ஓர் வான்வழிச் சேவை ஆகும். இது சிங்கப்பூர் வான்வழிச் சேவைக்கு முழுமையாக உரிமையான ஓர் கிளை நிறுவனமாகும். இது சிங்கப்பூரிலிருந்து தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா மற்றும் ஆத்திரேலியாவிலுள்ள 43 நகரங்களுக்கு திட்டமிட்ட பயணச் சேவைகளை இயக்குகிறது. சிங்கப்பூர் வான்வழிச் சேவையின் சூப்பர்அப் 1இல் ஐந்தாவது மாடியில் இதன் தலைமையகம் இயங்குகிறது.[4] சிங்கப்பூர் வான்வழிச் சேவைக் குழுமத்தின் குறைந்த தொலைவுப் பயணங்களுக்கான மண்டல பயணச்சேவை வழங்கும் நிறுவனமாக இயக்கப்படுகிறது. 2006ஆம் ஆண்டில் 1.56 மில்லியன் பயணியரை ஏற்றிச் சென்றுள்ளது.சிங்கப்பூர் டாலர் 415 மில்லியன் அளவில் விற்பனை ஆற்றியுள்ள இந்த நிறுவனத்தின் இலாபம் சி.டா 30 மில்லியனாக இருந்தது.[5] மார்ச்சு 31, 2010இல் சில்க் ஏரில் 278 ஊழியர்கள் பணி புரிந்தனர்.[6]
| |||||||
நிறுவல் | 1976 (டிரேட்விண்ட்ஸ் சார்ட்டர்சு என) | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் | சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் | ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | சிங்கப்பூர் வான்வழி#கிரிஸ்ஃபிளையர் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 21 (54 தருவிக்கைகள்) | ||||||
சேரிடங்கள் | 44 | ||||||
தாய் நிறுவனம் | சிங்கப்பூர் வான்வழிச் சேவை வரையறுக்கப்பட்டது | ||||||
தலைமையிடம் | சிங்கப்பூர் | ||||||
முக்கிய நபர்கள் | மரவின் டான் (மு.செ.அ)[1] லெசுலி திங் (மு.செ.அ அறிவிக்கை)[2] | ||||||
வலைத்தளம் | www.silkair.com |