சுக்ச்சி கடல்
கடல் / From Wikipedia, the free encyclopedia
சுக்ச்சி கடல் (Chukchi Sea) ஆர்க்டிக் பெருங்கடலின் கரையோரக் கடலாகும். இதன் மேற்கெல்லையாக டி லாங் நீரிணையும் கிழக்கில் அலாஸ்காவின் பரோ முனையும் அதையும் கடந்து பியூபோர்ட் கடலும் உள்ளன. பெரிங் நீரிணை தெற்கெல்லையாக பெரிங் கடலுடனும் அதன்வழியே அமைதிப் பெருங்கடலுடனும் இணைக்கிறது. சுக்ச்சி கடலின் முதன்மையானத் துறைமுகமாக உருசியாவின் யூலென் உள்ளது. பன்னாட்டு நாள் கோடு சுக்ச்சி கடலைக் கடக்கிறது. இந்த நாள்கோடு உருசிய நிலப்பகுதி சுகோத்கா தன்னாட்சி வட்டாரம் மற்றும் ராங்கல் தீவை தவிர்க்க கிழக்குமுகமாக வளைக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் சுக்ச்சி கடல், ஆள்கூறுகள் ...
சுக்ச்சி கடல் | |
---|---|
சுக்ச்சி கடலின் நிலப்படம் | |
ஆள்கூறுகள் | 69°N 172°W |
வகை | கடல் |
வடிநில நாடுகள் | உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடு |
மேற்பரப்பளவு | 620,000 km2 (240,000 sq mi) |
சராசரி ஆழம் | 80 m (260 அடி) |
நீர்க் கனவளவு | 50,000 km3 (4.1×1010 acre⋅ft) |
மேற்கோள்கள் | [1][2][3] |
மூடு
இந்தக் கடலின் பரப்பளவு ஏறத்தாழ 595,000 கிமீ² (230,000 மை²). ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமே இதில் பயணிக்க முடியும்.