சுரேந்திரநகர் மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சுரேந்திரநகர் மாவட்டம் (Surendranagar district) சுரேந்திரநகரை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. குசராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியில், கத்தியவார் தீபகற்பத்தில், சௌராஷ்டிர பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மக்கட்தொகை ஏறத்தாழ 17 இலட்சம். சுரேந்திரநகரை முன்பு `ஜாலா இராசபுத்திரர்கள்` ஆணடதால் இந்நகரை ஜாலா நகர்` என்று முன்பு அழைக்கப்பட்டது. சுரேந்திரநகர் மாநகராட்சி பகுதி நான்கு இலட்சம் மக்கள் கொண்டது. மாவட்டத் தலைநகரான இந்நகர் உயர்தொழில் நுட்பம் கொண்ட மாளிகைகள் அதிகமாக உள்ளது. இந்நகர், இந்தியாவின் பருத்தி நகர் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாவட்டப் பகுதியில் லிம்ப்டி சமஸ்தானம் செயல்பட்டது.
விரைவான உண்மைகள் சுரேந்திரநகர் மாவட்டம், நாடு ...
சுரேந்திரநகர் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
குஜராத் மாநிலத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 22.73°N 71.51°E / 22.73; 71.51 | |
நாடு | India |
மாநிலம் | குஜராத் |
பிரதேசம் | சௌராட்டிர தீபகற்பம் |
தலைமையிடம் | சுரேந்திரநகர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,489 km2 (4,050 sq mi) |
ஏற்றம் | 547 m (1,795 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 17,56,268 |
• அடர்த்தி | 144.45/km2 (374.1/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | குஜராத்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 363001 |
தொலைபேசி குறியீடு | 02752 |
வாகனப் பதிவு | GJ 13 |
பாலின விகிதம் | 0.924 ♀/♂ |
எழுத்தறிவு | 72.13%census of 2011 |
இணையதளம் | https://surendranagar.nic.in |
மூடு