பாகித்தானின் 4வது அதிபர் மற்றும் 9வது பிரதமர் (1928-1979) From Wikipedia, the free encyclopedia
சுல்பிக்கார் அலி பூட்டோ (Zulfikar Ali Bhutto, உருது:ذوالفقار علی بھٹو, சிந்தி: ذوالفقار علي ڀُٽو, ) (ஜனவரி 5, 1928–ஏப்ரல் 4, 1979) பாகிஸ்தானின் அரசியல்வாதியாவார். இவர் பாகிஸ்தானின் அதிபராக 1971 முதல் 1973 வரையிலும், அதன் பிரதமராக 1973 முதல் 1977 வரையில் பணியாற்றினார். இவர் பாகிஸ்தானின் மிகவும் செல்வாக்குள்ள அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை நிறுவியவர். இவரது மகள் பெனாசிர் பூட்டோ இரண்டு தடவைகள் பாகிஸ்தான் பிரதமராக இருந்து டிசம்பர் 27, 2007 இல் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார்.
சுல்பிக்கார் அலி பூட்டோ Zulfikar Ali Bhutto | |
---|---|
பாகிஸ்தானின் 4வது அதிபர் | |
பதவியில் டிசம்பர் 20, 1971 – ஆகஸ்ட் 13, 1973 | |
பிரதமர் | நூருல் அமீன் |
முன்னையவர் | யாஹ்யா கான் |
பின்னவர் | ஃபசல் இலாஹி சௌத்திரி |
பாகிஸ்தானின் 10வது பிரதமர் | |
பதவியில் ஆகஸ்ட் 14, 1973 – ஜூலை 5, 1977 | |
குடியரசுத் தலைவர் | ஃப்சல் இலாஹி சௌத்திரி |
முன்னையவர் | நூருல் அமீன் |
பின்னவர் | முகமது கான் ஜுனேஜோ |
பாகிஸ்தானின் 5வது வெளிநாட்டமைச்சர் | |
பதவியில் ஜூன் 15, 1963 – செப்டம்பர் 12, 1966 | |
முன்னையவர் | முகமது அலி போக்ரா |
பின்னவர் | சயெட் பிர்சாதா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லார்க்கானா, பிரித்தானிய இந்தியா | 5 சனவரி 1928
இறப்பு | 4 ஏப்ரல் 1979 51) ராவல்பிண்டி, பாகிஸ்தான் | (அகவை
அரசியல் கட்சி | பாகிஸ்தான் மக்கள் கட்சி |
சுல்பிக்கார் அலி பூட்டோ ஐக்கிய அமெரிக்காவின் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் ஐக்கிய இராச்சியத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி கற்றவர். இவர் 1979 இல் தனது அரசியல் எதிரியை கொலை செய்யத் தூண்டியமைக்காக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்[1][2].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.