![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/8/85/ManofSteelFinalPoster.jpg/640px-ManofSteelFinalPoster.jpg&w=640&q=50)
சூப்பர் மேன் (2013 திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
மேன் ஆஃப் ஸ்டீல்[1] (ஆங்கில மொழி: Man of Steel) என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க - ஐக்கிய இராச்சிய[2] நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய சூப்பர் மேன் என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், லெஜென்டரி என்டர்டெயின்மென்ட், டிசி என்டர்டெயின்மென்ட் மற்றும் சின்காபி இன்க். ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முதலாவது திரைப்படம் ஆகும்.
மேன் ஆஃப் ஸ்டீல் | |
---|---|
![]() | |
இயக்கம் | சாக் சினைடர் |
தயாரிப்பு | கிறிஸ்டோபர் நோலன் சார்லஸ் ரோவேன் எம்மா தாமஸ் டெபோரா சினைடர் |
மூலக்கதை | டிசி காமிக்ஸ் |
திரைக்கதை | டேவிட் எஸ்.கொயர் |
இசை | ஹான்ஸ் சிம்மர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அமீர் மோக்ரி |
படத்தொகுப்பு | டேவிட் ப்ரென்னர் |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $225–258 மில்லியன் |
மொத்த வருவாய் | $668 மில்லியன் |
கிறிஸ்டோபர் நோலன், சார்லஸ் ரோவேன், எம்மா தாமஸ் மற்றும் டெபோரா சினைடர் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்திற்கு டேவிட் எஸ்.கொயர் என்பவர் திரைக்கதை எழுத சாக் சினைடர்[3] என்பவர் இயக்கத்தில் ஹென்றி கவில், ஏமி ஆடம்சு, மைக்கேல் ஷானோன், டயான் லேன், கெவின் கோஸ்ட்னர், லாரன்ஸ் பிஷ்பர்ன், ஆன்ட்ஜே ட்ரூ, அய்லெட் ஜூரர், கிறிஸ்டோபர் மேலோனி மற்றும் ரசல் குரோவ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
மேன் ஆஃப் ஸ்டீல் என்பது சூப்பர்மேன் திரைப்படத் தொடரின் மீள் உருவாக்கம்[4] ஆகும். இது சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் மூலக் கதையை சித்தரிக்கிறது. இப்படமானது ஜூன் 14, 2013 அன்று வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் 2டி, 3டி மற்றும் ஐமாக்ஸில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது, உலகளவில் 668 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இந்த படத்தின் தொடர்சியாக பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் என்ற படம் மார்ச் 25, 2016 அன்று வெளியானது.
தமிழகத்தில் 180 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. இயக்குனர் ராம நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை வெளிவிட்டது.