சேலம்
தமிழகத்திலுள்ள பெருநகரம் / From Wikipedia, the free encyclopedia
சேலம் (ஆங்கிலம்:Salem) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சேலம் மாநகராட்சி ஆகும். தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. மழவர் நாட்டில் அமைந்துள்ள இவ்வூர், மாம்பழத்திற்கு பெயர் பெற்றது. சேலம் மாநகராட்சி பரந்து விரிந்த ஓர் பெருநகரம் ஆகும். தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிக்கு அடுத்த ஐந்தாவது பெருநகரம் ஆகும். தென்னிந்தியாவை பொறுத்தவரையும், தமிழகத்தை பொறுத்தவரை இங்கு தான் தமிழக மக்கள் நுகர்வோர் பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படும். சேலம் மாநகர விலைதான் தமிழகத்தில் 38 மாவட்டங்களும் நிர்ணயிக்கப்படும். சேலம் மாநகராட்சியானது தென்னிந்திய இரயில்வே கோட்ட தலைமை இடமாகும். இந்த கோட்டத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்கள் அடங்கும். இதனால்தான் இது சேலம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
சேலம் | |
---|---|
அடைபெயர்(கள்): எஃகு நகரம் (Steel City), மாங்கனி நகரம் (Mango City)[1] | |
ஆள்கூறுகள்: 11.664300°N 78.146000°E / 11.664300; 78.146000 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
பகுதி | மழவர் நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | சேலம் மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | எஸ். ஆர். பார்த்திபன் |
• சட்டமன்ற உறுப்பினர் | ஆர். ராஜேந்திரன் (சேலம் வடக்கு) ஆர். அருள் (சேலம் மேற்கு) ஏ.இ. பாலசுப்பிரமணியன் (சேலம் தெற்கு) |
• மாநகர முதல்வர் | காலியிடம் |
• மாவட்ட ஆட்சியர் | செ. கார்மேகம், இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• பெருநகரம் | 124 km2 (48 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5 |
ஏற்றம் | 307 m (1,007 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• பெருநகரம் | 8,29,267 |
• தரவரிசை | 5 |
• அடர்த்தி | 9,079/km2 (23,510/sq mi) |
• பெருநகர் | 9,17,414 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 636 xxx |
தொலைபேசி குறியீடு | +91-427 |
வாகனப் பதிவு | TN-27, TN-30, TN-54, TN-90 |
சென்னையிலிருந்து தொலைவு | 340 கி.மீ. (212 மைல்) |
கோவையிலிருந்து தொலைவு | 168 கி.மீ. (105 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 140 கி.மீ. (87 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 235 கி.மீ. (145 மைல்) |
இணையதளம் | salem corporation |