![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b8/Joghurt.jpg/640px-Joghurt.jpg&w=640&q=50)
தயிர்
பாலில் இருந்து பெறப்படும் பொருள் / From Wikipedia, the free encyclopedia
தயிர் (curd) பாலில் இருந்து பெறப்படும் ஒரு உற்பத்திப்பொருள் ஆகும், பாலில் நுண்ணுயிர்களின் நொதித்தல் செயற்பாடு காரணமாக தயிர் பெறப்படுகின்றது. லாக்டோசு நொதிக்கும் போது லாக்ட்டிக் அமிலம் கிடைக்கிறது, அது பாலின் புரதத்துடன் செயல்புரியும் போது தயிருக்குரிய இழையமைப்பு மற்றும் அதன் சிறப்பியல்பு கொண்ட புளித்த சுவையை அளிக்கின்றது. எருமை, பசு போன்றவற்றின் பாலிலிருந்து தயிர் பெறப்படுகின்றது. இவற்றுக்குப் பதிலீடாக சோயாப் பாலில் இருந்தும் தயிர் தயாரிக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் உணவாற்றல், கார்போவைதரேட்டு ...
உணவாற்றல் | 257 கிசூ (61 கலோரி) |
---|---|
4.7 கி | |
சீனி | 4.7 கி (*) |
3.3 கி | |
நிறைவுற்றது | 2.1 கி |
ஒற்றைநிறைவுறாதது | 0.9 கி |
3.5 கி | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
ரிபோஃபிளாவின் (B2) | (12%) 0.14 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (12%) 121 மிகி |
(*) Lactose content diminishes during storage. | |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b8/Joghurt.jpg/640px-Joghurt.jpg)
இன்று தயிர் உலகம் முழுவதும் கிடைக்கும் ஒரு பொதுவான உணவாகும். இது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல் நலத்தைப் பேணும் நலன்கள் கொண்ட உணவாகவும் காணப்படுகின்றது. புரதங்கள், கால்சியம், ரிபோஃபிளாவின், வைட்டமின்பி 6 மற்றும் வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துகள் கொண்டதாகவும் திகழ்கிறது.