தி வாசிங்டன் போஸ்ட்
From Wikipedia, the free encyclopedia
தி வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) என்பது அமெரிக்க நாளிதழ் ஆகும். இது 1877 இல் துவக்கப்பட்டு, வாசிங்டன், டி. சி.யில் இருந்து வெளியிடப்படுகிறது.[7]
"Democracy Dies in Darkness" | |
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | விரிதாள் |
உரிமையாளர்(கள்) | டபிளுயூபி கம்பெனி எல்எல்சி (நாஷ் ஹோல்டிங் எல்எல்சி) (ஜெப் பெசோஸ்)[1][2] |
நிறுவுனர்(கள்) | ஸ்டில்சன் ஹட்சின்ஸ் |
வெளியீட்டாளர் | ஃப்ரெட் ரியான்[3] |
ஆசிரியர் | மார்ட்டின் பரோன்[2] |
எழுத்துப் பணியாளர்கள் | Approx. 740 journalists[4] |
நிறுவியது | திசம்பர் 6, 1877; 146 ஆண்டுகள் முன்னர் (1877-12-06) |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் |
|
விற்பனை |
|
ISSN | 0190-8286 |
OCLC எண் | 2269358 |
இணையத்தளம் | www |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
அமெரிக்காவின் தலைநகரில் அமைந்துள்ள இந்த செய்தித்தாள் தேசிய அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இது வாசிங்டன், டி. சி., மேரிலாந்து, வர்ஜீனியா பகுதிகளில் இருந்து பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. இது விரிதாளாக பிரசுரிக்கப்படுகிறது.
இந்த செய்தித்தாள் 47 புலிட்சர் பரிசுகளை வென்றுள்ளது. 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஆறு தனித்திறன் புலிட்சர்களும் இதில் அடங்கும், 2002 ஆம் ஆண்டில் தி நியூயார்க் டைம்ஸ் ஏழு விருதுகள் பெற்றது. ஒரு ஆண்டில் ஒரே ஒரு செய்தித்தாளுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கையிலான பரிசுகளில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்தது.[8] போஸ்ட் பத்திரிகையாளர்கள் 18 நிமேன் பெல்லோஷிப்ஸையும் 368 வெள்ளை மாளிகை செய்தி ஒளிப்பட சங்க விருதுகளையும் பெற்றுள்ளனர். 1970 களின் முற்பகுதியில், செய்தித்தாள் வரலாற்றில் மிக பிரபலமான புலனாய்வு, நிருபர்களான பாப் உட்வார்ட் மற்றும் கார்ல் பெர்ன்ஸ்டைன் ஆகியோர் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு 'வாட்டர்கேட் ஊழல்' என்று அறியப்பட்ட விசாரணைக்கு தலைமைத் தாங்கினர்; இந்த பத்திரிக்கை அந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததால் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் பதவிவிலகும் நிலை ஏற்பட்டது.[9]
2013 ஆம் ஆண்டில், அதன் நீண்டகால உரிமையாளர் குடும்பமான, கிரஹாம் குடும்பமானது செய்தித்தாள் நிறுவனத்தை அமேசான்.காம் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு 250 மில்லியன் டாலர் விலைக்கு விற்றது.[1][2][10]