![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b7/Namakkal_Bus_Stand.jpg/640px-Namakkal_Bus_Stand.jpg&w=640&q=50)
நாமக்கல்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
நாமக்கல் (Namakkal) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும், மாநகராட்சி ஆகும். நாமக்கல் மாநகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும். 2011-இல் நகராட்சியானது கொண்டிசெட்டிப்பட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டது. 2024 ல் நாமக்கல் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய ஊராட்சிகள், நாமக்கல் நகராட்சியுடன் இணைத்து நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
நாமக்கல் | |
---|---|
![]() நாமக்கல் பேருந்து நிலையத்துடன் சேர்த்து மலைக்கோட்டை புகைப்படம் | |
அடைபெயர்(கள்): கோழி நகரம், போக்குவரத்து நகரம் | |
ஆள்கூறுகள்: 11°13′09.8″N 78°10′04.1″E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
பகுதி | மழவர் நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | நாமக்கல் மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | ஏ. கே. பி. சின்ராஜ் |
• சட்டமன்ற உறுப்பினர் | பி. இராமலிங்கம் |
• மாவட்ட ஆட்சியர் | சிரேயா பி. சிங், இ.ஆ.ப. |
ஏற்றம் | 221 m (725 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 55,145 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 637 0-01, (02, 03 ... 637 0-12) |
தொலைபேசி குறியீடு | 04286 |
வாகனப் பதிவு | TN-28 (வடக்கு), TN-88 (தெற்கு) , TN-34 (திருச்செங்கோடு) |
சென்னையிலிருந்து தொலைவு | 360 கி.மீ. (225 மைல்) |
சேலத்திலிருந்து தொலைவு | 53 கி.மீ. (33 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 89 கி.மீ. (55 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 185 கி.மீ. (115 மைல்) |
இணையதளம் | namakkal |