![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/Nimal_Siripala_de_Silva_2023.jpg/640px-Nimal_Siripala_de_Silva_2023.jpg&w=640&q=50)
நிமல் சிறிபால டி சில்வா
From Wikipedia, the free encyclopedia
நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva, பிறப்பு: செப்டம்பர் 6, 1944), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நீர்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரும், நாடாளுமன்ற சபை முதல்வருமான இவர் சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
நிமல் சிறிபால டி சில்வா | |
---|---|
නිමල් සිරිපාල ද සිල්වා Nimal Siripala de Silva | |
![]() | |
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 ஆகத்து 2022 | |
குடியரசுத் தலைவர் | ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | தினேஷ் குணவர்தன |
முன்னையவர் | இவரே |
பதவியில் 20 மே 2022 – 6 ஜூலை 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | பிரமிதா தென்னகோன் |
பின்னவர் | இவரே |
தொழிலாளர் அமைச்சர் | |
பதவியில் 12 ஆகத்து 2020 – 3 ஏப்ரல் 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மஹிந்த ராஜபக்ச |
முன்னையவர் | டளஸ் அளகப்பெரும |
பின்னவர் | விதுர விக்கிரமநாயக்க |
பதவியில் 4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார |
பின்னவர் | அர்ஜுன றணதுங்க |
நீதி அமைச்சர் | |
பதவியில் 22 நவம்பர் 2019 – 12 ஆகத்து 2020 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மஹிந்த ராஜபக்ச |
முன்னையவர் | தலதா அத்துகோரல |
பின்னவர் | அலி சப்ரி |
13 வது எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 16 ஜனவரி 2015 – 26 ஜூன் 2015 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | ரணில் விக்கிரமசிங்க |
பின்னவர் | இரா. சம்பந்தன் |
இலங்கை நாடாளுமன்றம் for பதுளை மாவட்ட | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2000 | |
இலங்கை நாடாளுமன்றம் for கொழும்பு மாவட்ட | |
பதவியில் 1989–2000 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 செப்டம்பர் 1944 (1944-09-06) (அகவை 79) பதுளை, ஊவா மாகாணம், பிரித்தானிய இலங்கை |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு (2019 – தற்போது) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (2004 – 2019) மக்கள் கூட்டணி (1994 – 2004) |
முன்னாள் கல்லூரி | நாலந்தா கல்லூரி, கொழும்பு |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | புரோக்கர் |