From Wikipedia, the free encyclopedia
நெல்லி பிளை (Nellie Bly, நெலி பிளை, மே 5, 1864 – சனவரி 27, 1922) என்ற புனை பெயர் கொண்ட அமெரிக்க இதழியலாளரின் இயற்பெயர் எலிசெபத் ஜானே காக்ரான் ஆகும்.[1]
நெல்லி ப்ளை Nellie Bly | |
---|---|
பிறப்பு | எலிசெபத் ஜானே காக்ரான் மே 5, 1864 காக்ரன்சு மில்சு, பென்சில்வேனியா, அமெரிக்கா |
இறப்பு | சனவரி 27, 1922 57) நியூயார்க், அமெரிக்கா | (அகவை
தேசியம் | அமெரிக்கன் |
பணி | பத்திரிக்கையாளர், புதின எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர் |
வாழ்க்கைத் துணை | ராபர்ட் சீமன் (1895) |
விருதுகள் | National Women's Hall of Fame (1998) |
கையொப்பம் | |
Notes திருமணத்திற்குப் பிறகு "எலிசெபத் காக்ரான் சீமன்," என்று மாற்றிக் கொண்டார். |
வறுமையால் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார். பெண்களைப் பற்றி வெறுப்போடு எழுதிய ஒரு பத்திரிக்கைக்கு பதிலளித்து நெல்லி ப்ளை என்ற புனை பெயரில் கடிதம் எழுதினார். அந்த பத்திரிக்கை ஆசிரியர் அவரை வேலைக்கு அழைத்தார். ஆனால் பெண் என்பதால் வேலை தர மறுத்தார். பின் தொடர்ந்து முயன்று வேலையில் அமர்ந்தார். பெண் தொழிலாளிகளின் துயரங்களை எழுதினார். ஒரு கட்டத்துக்கு மேல் சாதாரண விசயங்களை எழுதுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். ஒரு மனநோயாளியாக நடித்து பத்து நாட்கள் போய்க் காப்பகத்தில் இருந்து அதை எழுதினார். மனநோய் பற்றிய மருத்துவம், நீதித்துறை, காப்பக நிர்வாகம் அனைத்தையும் அம்பலப்படுத்தினார்.
80 நாட்களில் உலகம் சுற்றி வரும் பணியை ஏற்று புறப்பட்டார். மிகத் திறமையாக செயல்பட்டு நீராவிக் கப்பல்கள், ரயில்கள் மூலம் 72 நாட்களிலேயே உலகம் சுற்றி திரும்பினார். செய்திகளும் அனுப்பினார்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.