பண்டார் உத்தாமா டாமன்சாரா
சிலாங்கூர் புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
பண்டார் உத்தாமா அல்லது பண்டார் உத்தாமா டாமன்சாரா (மலாய்: Bandar Utama Damansara (BU); ஆங்கிலம்: Bandar Utama Damansara; சீனம்: 万达镇); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், சுங்கை பூலோ முக்கிம் பகுதிக்குள் அமைந்து உள்ள பெரிய குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும்.
பண்டார் உத்தாமா | |
---|---|
Bandar Utama | |
அடைபெயர்(கள்): BU | |
ஆள்கூறுகள்: 3°8′36″N 101°36′41″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
மாநகராட்சி | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
அரசு | |
• வகை | உள்ளாட்சி |
• நிர்வாகம் | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
• மாநகர முதல்வர் | முகமட் அசான் அமீர் Mohamad Azhan Md. Amir 21 அக்டோபர் 2021 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 46xxx, 473xx, 474xx, 478xx, 52xxx |
இணையதளம் | mbpj |
பண்டார் உத்தாமா டாமன்சாரா புறநகர்ப் பகுதி; அதன் அருகில் இருக்கும் கம்போங் சுங்கை காயு ஆரா (Kampung Sungai Kayu Ara) புறநகர்ப் பகுதி; ஆகிய இரு பகுதிகளும் இணைந்து, பெட்டாலிங் ஜெயாவில் PJU 6 (PJU 6 Section) எனும் நகர்ப் பிரிவை உருவாக்குகின்றன. பண்டார் உத்தாமா டாமன்சாரா, ஏறக்குறைய 1000 ஏக்கர் (4 கி.மீ²) பரப்பளவைக் கொண்டது.[1]
கிள்ளான் பள்ளத்தாக்கில் மிகவும் பிரபலமான 1 உத்தாமா வணிக மையம் (1 Utama Shopping Centre) இங்குதான் உள்ளது.[2] கோலாலம்பூரின் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலுக்கு எதிரே அமைந்து உள்ளது.[3]