![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/Pusat_Bandar_Puchong_Station_-_Mapillary_%2528hjyMh5NpDQ8mZgaBQ2GTBA%2529.jpg/640px-Pusat_Bandar_Puchong_Station_-_Mapillary_%2528hjyMh5NpDQ8mZgaBQ2GTBA%2529.jpg&w=640&q=50)
பண்டார் பூச்சோங்
பூச்சோங் நகர மையம் / From Wikipedia, the free encyclopedia
பண்டார் பூச்சோங் அல்லது பூச்சோங் நகர மையம், (மலாய்: Pusat Bandar Puchong; ஆங்கிலம்: Puchong Town Centre; சீனம்: 蒲种再也); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் பெருநகர்ப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு புறநகரம் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் பண்டார் பூச்சோங், நாடு ...
பண்டார் பூச்சோங் | |
---|---|
Bandar Puchong | |
![]() பூச்சோங் நகர மையத்தில் எல்ஆர்டி (LRT) இலகு தொடருந்து நிலையம் | |
ஆள்கூறுகள்: 3°0′7″N 101°38′39″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | சுபாங் ஜெயா மாநகராட்சி |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மூடு
இந்த மையம் ஐ.ஓ.ஐ. பேரங்காடி (IOI Mall), பூச்சோங் ஜெயா (Puchong Jaya) மற்றும் கின்ராரா நகரத்திற்கு (Bandar Kinrara) அருகில் அமைந்துள்ளது.
பூச்சோங் நகர மையத்தின் வடக்கில் சுபாங் ஜெயா மாநகரம், கின்ராரா நகரம்; தெற்கில் புத்ராஜெயா நகரம்; சிப்பாங் நகரம்; கிழக்கில் செர்டாங் நகரம்; மேற்கில் புத்ரா அயிட்ஸ் ஆகிய நகர்ப் புறங்கள் உள்ளன.