அப்துல் ரசாக் உசேன்
From Wikipedia, the free encyclopedia
துன் அப்துல் ரசாக் உசேன்; (மார்ச் 12, 1922 — ஜனவரி 14, 1976), (மலாய்: Tun Haji Abdul Razak bin Dato' Hussein; ஆங்கிலம்: Tun Abdul Razak Hussein; சீனம்: 阿卜杜勒·拉扎克); என்பவர் மலேசியாவின் இரண்டாவது பிரதமர்.
விரைவான உண்மைகள் துன்அப்துல் ரசாக் உசேன், இரண்டாவது மலேசியப் பிரதமர் ...
அப்துல் ரசாக் உசேன் | |
---|---|
இரண்டாவது மலேசியப் பிரதமர் | |
பதவியில் 1970 செப்டம்பர் 22 – 1976 ஜனவரி 14 | |
ஆட்சியாளர்கள் | யாஹ்யா பெத்ரா கிளாந்தான் அகமட் ஷா பகாங் |
Deputy | துன் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் உசேன் ஓன் |
முன்னையவர் | துங்கு அப்துல் ரகுமான் |
பின்னவர் | உசேன் ஓன் |
மலேசியத் துணைப் பிரதமர் | |
பதவியில் 1957 ஆகஸ்ட் 31 – 1970 செப்டம்பர் 22 | |
பிரதமர் | துங்கு அப்துல் ரகுமான் |
பின்னவர் | இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1922-03-11)11 மார்ச்சு 1922 பெக்கான், பகாங், மலாயா (இப்போது மலேசியா) |
இறப்பு | 14 சனவரி 1976(1976-01-14) (அகவை 53) லண்டன், இங்கிலாந்து |
அரசியல் கட்சி | தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு (1953–1976) தொழிலாளர் கட்சி (ஐக்கிய இராச்சியம்) |
துணைவர் | ரஹா நோ (Rahah Noah) |
பிள்ளைகள் | 5 |
முன்னாள் கல்லூரி | மலாயா பல்கலைக்கழகம் லிங்கன்ஸ் இன் (சட்டத் துறை) |
தொழில் | வழக்குரைஞர் |
மூடு
1970-ஆம் ஆண்டில் இருந்து 1976-ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவியை வகித்தவர். மலேசியாவின் மேம்பாட்டுத் தந்தை (Father of Development), (மலாய்: Bapa Pembangunan) என்று போற்றப் படுகிறவர்.
இவர் ஆட்சியில் இருந்த போது, மலேசியாவில் இருந்த பல அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, பாரிசான் நேசனல் எனும் ஆளும் கூட்டணியை அமைத்தவர். மலேசியப் புதிய பொருளாதாரக் கொள்கையை (Malaysian New Economic Policy) அறிமுகப் படுத்தியவர்.[1]