தென் கொரிய நாட்டு ஆண்கள் இசைக்குழு From Wikipedia, the free encyclopedia
பிடிஎஸ் (BTS/방탄소년단) அல்லது பாங்டன் ஸொனென்தன் என்பது ஜின், ஆர்.எம்., ஜுங்கூக், ஜே-ஹோப், சுகா, வி மற்றும் ஜிமின் போன்ற ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தென் கொரிய நாட்டு ஆண்கள் இசைக்குழு ஆகும். இது 2010 இல் உருவாக்கப்பட்டு 2013 இல் பிக் ஹிட் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் கீழ் அறிமுகமானது. இவர்களின் பாடல் பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் சமூக வர்ணனைகளை மையமாகக் கொண்டது. இதனால் இவர்களின் பாடல் வரிகள் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானது. இவர்களின் படைப்புகளில் பெரும்பாலும் இலக்கியம் மற்றும் உளவியல் கருத்துக்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் மாற்று பிரபஞ்சக் கதையையும் உள்ளடக்கியது. இந்த குழு பல ஆல்பங்களை வெளியிட்டு பல உலக சுற்றுப்பயணங்களில் நிகழ்த்தியுள்ளது.
பிடிஎஸ் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பின்னணித் தகவல்கள் | |||||||
பிறப்பிடம் | சியோல், தென் கொரியா | ||||||
இசை வடிவங்கள் |
| ||||||
இசைத்துறையில் | 2013–தற்பொழுது வரை | ||||||
வெளியீட்டு நிறுவனங்கள் | |||||||
இணைந்த செயற்பாடுகள் | ஸ்டீவ் ஆகி | ||||||
இணையதளம் | bts | ||||||
உறுப்பினர்கள் | |||||||
கொரியப் பெயர் | |||||||
அங்குல் எழுத்துமுறை | 방탄소년단 | ||||||
Hanja | 防彈少年團 | ||||||
| |||||||
சப்பானியப் பெயர் | |||||||
Kanji | 防弾少年団 | ||||||
ஹிரகனா எழுத்துக்கள் | ぼうだんしょうねんだん | ||||||
|
இக்குழு 2013 ஆம் ஆண்டில் அவர்களின் ஒற்றை ஆல்பமான '2 கூல் 4 ஸ்கூல்' என்ற பாடலுடன் அறிமுகமானது. பின்னர் அவர்களின் முதல் கொரிய மொழி இசுடுடியோ ஆல்பமான 'டார்க் & வைல்ட்' மற்றும் ஜப்பானிய மொழி இசுடுடியோ ஆல்பமான 'வேக் அப்' ஆகியவற்றை 2014 இல் வெளியிட்டது. இவர்களின் இரண்டாவது கொரிய இசுடுடியோ ஆல்பமான 'விங்ஸ்' (2016) என்ற ஆல்பம் தென் கொரியாவில் முதன்முதலில் ஒரு மில்லியன் பிரதிகள் விற்று சாதனையை படைத்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டளவில் பிடிஎஸ் உலகளாவிய இசை சந்தையில் நுழைந்து அமெரிக்காவிலும் ஏராளமான விற்பனை சாதனைகளை முறியடித்தது.
பிடிஎஸ் இசைக்குழு இதுவரைக்கும் 6 அமெரிக்க இசை விருதுகள், 5 பில்போர்டு மியூசிக் விருதுகள் மற்றும் 24 கோல்டன் டிஸ்க் விருதுகள் மற்றும் கிராமி விருது மற்றும் பிரிட் விருதுக்கான பரிந்துரைகள் உட்பட அவர்களின் படைப்புகளுக்கு ஏராளமான விருதுகளையும் மற்றும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.