மாலே
From Wikipedia, the free encyclopedia
மாலே (ஆங்கில மொழி: Malé; திவெயி: މާލެ), மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். இது மாலே தீவில் அமைந்துள்ளது. வணிகத் துறைமுகம் ஒன்று இத்தீவில் அமைந்துள்ளது. மேலும் நாட்டின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் இத்தீவை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. மாலே அனைத்துலக விமான நிலையம் இத்தீவிற்கு அருகில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாலே މާލެ, நாடு ...
மாலே
މާލެ | |
---|---|
ஆள்கூறுகள்: 4°10′31″N 73°30′32″E | |
நாடு | மாலைத்தீவுகள் |
புவியியல் பவளத் தீவு | வடக்கு மாலே பவளத் தீவு |
அரசு | |
• சபை | மாலே நகர சபை (PPM) |
• நகரத்தந்தை | முகமது முயிஸ்[1] |
பரப்பளவு | |
• நகர்ப்புறம் | 1.95 km2 (0.75 sq mi) |
• மாநகரம் | 9.27 km2 (3.58 sq mi) |
ஹல்ஹுலே தீவு மற்றும் ஹுல்ஹுமாலே மெட்ரோ பகுதியும் அடங்கும் | |
ஏற்றம் | 2.4 m (7.9 ft) |
மக்கள்தொகை (2014)[2] | |
• தலைநகரம் | 1,33,412[2] |
• மதிப்பீடு (2021) | 2,52,768[3][4] |
• அடர்த்தி | 27,180/km2 (70,400/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (MST) |
ஒதுக்கப்பட்ட எழுத்து | T |
பகுதி குறியீடு(கள்) | 331, 332, 333, 334 |
ஐஎசுஓ 3166 குறியீடு | MV-MLE |
இணையதளம் | malecity.gov.mv |
மூடு
மாலே நகரமானது போர்த்துக்கேய வணிகர்களால் 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.[5]
மாலே, பெருமளவில் நகரமயமாக்கப்பட்ட தீவாகும். மேலும், இது உலகிலேயே மக்கள்தொகை அடர்த்தி கூடிய நகரமாகும். இந்நகரம் நான்கு பிரிவுகளாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.
டிசம்பர் 26, 2004 இல் இந்தியப் பெருங்கடல் பேரலை, 2004 காரணமாக மாலே நகரின் மூன்றில் இரண்டு பாகம் நீரில் மூழ்கியது.