மாலைத்தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
மாலத்தீவு (Maldives) அல்லது மாலத்தீவு குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கி.மீ. தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200-இல் மட்டும் மனிதக் குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற அரபு மொழிச் சொல்லின் மரூஉ ஆகும். சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டன. 1153இல் இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558-இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965-ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1968-இல் சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத் தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார்.
மாலத்தீவு குடியரசு ދިވެހިރާއްޖޭގެ ޖުމުހޫރިއްޔާ.
திவேஹி ராஜ்ஜெய்கே ஜும்ஹூரியா | |
---|---|
நாட்டுப்பண்: கவ்மீ மீ எகுவெரிகன் மட்டி(தேச ஒற்றுமையால் நாட்டை வணங்குகிறோம்) | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | மாலே |
ஆட்சி மொழி(கள்) | திவெயி |
அரசாங்கம் | குடியரசு |
• அரசுத்தலைவர் | முகமது வாகித் அசன் |
விடுதலை | |
• ஐ.இ.-இடமிருந்து | சூலை 26 1965 |
பரப்பு | |
• மொத்தம் | 298 km2 (115 sq mi) (204-ஆவது) |
• நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது |
மக்கள் தொகை | |
• சூலை 2005 மதிப்பிடு | 329,000 (176-ஆவது1) |
• 2006 கணக்கெடுப்பு | 298,842 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $2.569 பில்லியன் (162-ஆவது) |
• தலைவிகிதம் | $7,675 (79-ஆவது) |
மமேசு (2003) | 0.745 உயர் · 96-ஆவது |
நாணயம் | றவுஃபியா (MVR) |
நேர வலயம் | ஒ.அ.நே+5 |
அழைப்புக்குறி | 960 |
இணையக் குறி | .mv |
1 2005 ஐநாவின் மதிப்பீட்டின் அடிப்படையில். |