மிசிசிப்பி ஆறு
From Wikipedia, the free encyclopedia
மிசிசிப்பி ஆறு வட அமெரிக்காவில் மிகப்பெரிய வடிகாலமைப்பையுடைய பிரதான ஆறாகும்.[3][4] ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஆறுகளில் நீளத்தின் அடிப்படையில் இரண்டாவது பெரிய ஆறு ஆகும். மினசோட்டாவில் உள்ள இத்தாஸ்கா ஏரியில் இருந்து உற்பத்தியாகி மெக்சிக்கோ குடாவில் கலக்கும் இது 2,320 மைல்கள் (3,734 கிமீ) நீளம் கொண்டது. ஐக்கிய அமெரிக்காவிலேயே அதிக நீளம் கொண்ட மிசோரி ஆறு இதன் கிளை ஆறு ஆகும்.
மிசிசிப்பி ஆறு | |
---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலங்கள் | மினசோட்டா, விஸ்கொன்சின், அயோவா, இலினொய், மிசூரி, கென்டக்கி, தென்னசி, ஆர்கன்சா, மிசிசிப்பி, லூசியானா |
முதன்மை நகரங்கள் |
மினியாபொலிஸ் மற்றும் செயின்ட் பால், மினசோட்டா, செயின்ட் லூயிஸ், மிசூரி, மெம்ஃபிஸ், டென்னசி, பாடன் ரூஜ், லூசியானா, நியூ ஓர்லென்ஸ், லூசியானா |
நீளம் | 2,320 மைல் (3,734 கிமீ) |
வடிநிலம் | 11,51,000 ச.மைல் (29,81,076 கிமீ²) |
வெளியேற்றம் | பாடன் ரூஜ், LA |
- சராசரி | [1] |
வெளியேறும் பிற இடங்கள் | |
- சென். லூயிஸ் | [2] |
மூலம் | இத்தாஸ்கா ஏரி |
- அமைவிடம் | இத்தாஸ்கா அரச பூங்கா, கிளியர்வாட்டர் கவுண்டி, MN |
- உயரம் | 1,475 அடி (450 மீ) |
கழிமுகம் | மெக்சிக்கோ குடா |
- அமைவிடம் | பைலட்டவுன், பிளாக்மைன்ஸ் பாரிஷ், LA |
- உயரம் | 0 அடி (0 மீ) |
முதன்மைக் கிளை ஆறுகள் | |
- இடம் | ஒஹைய்யோ ஆறு |
- வலம் | மிசோரி ஆறு, ஆர்கன்சா ஆறு |
மிசிசிப்பி ஆற்றின் நிலப்படம்.
| |
மிசிசிப்பி ஆறு, வட அமெரிக்காவின் மிகப் பெரிய ஆற்றுத் தொகுதியும், உலகின் பெரிய ஆற்றுத் தொகுதிகளுள் ஒன்றும் ஆகிய ஜெபர்சன்-மிசூரி-மிசிசிப்பி ஆற்றுத் தொகுதியின் ஒரு பகுதியாகும். நீள அடிப்படையில், 3,900 மைல்கள் (6,275 கிமீ) நீளம் கொண்ட இத்தொகுதி உலகின் நான்காவது பெரியதும், 572,000 க.அடி/செ (16,200 கமீ/செ) சராசரி நீர் வெளியேற்ற அளவுடன், உலகின் 10 ஆவது பெரிய தொகுதியாகவும் இது விளங்குகின்றது.
பூர்வீக அமெரிக்கர்கள் நீண்ட காலமாக மிசிசிப்பி மற்றும் துணை ஆற்றுப் பிரதேசங்களில் வாழ்ந்துள்ளனர்.அவர்களின் பெரும்பாலானவர்கள் வேட்டைக் குழுக்களாகவும், மந்தை மேய்ப்பாளர்களமாக காணப்பட்டனர்.எனினும் சில மலைகளில் வீடுகள் அமைக்கும் குழுவினர் போன்றவர்கள் செழிப்பான விவசாய சமூகங்களை உருவாக்கியிருக்கின்றனர்.1500இல் ஐரோப்பியர்களின் வருகையானது அப்பிரதேச மக்களின் பூர்வீக வாழ்வின் பாதையை மாற்றியது.
மிசிசிப்பி ஆற்றின் கிளை ஆறுகளுள் மிக நீளமானது மிசோரி ஆறும், அதிக கன அளவு கொண்ட கிளை ஆறு, ஒஹைய்யோ ஆறும் ஆகும்.