இந்தோனேசிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia
மேற்கு சுமாத்திரா (West Sumatra,இந்தோனேசிய மொழி: Sumatera Barat, சுருங்க சும்பார்) இந்தோனேசியாவின் மாகாணமாகும். சுமாத்திராத் தீவின் மேற்கு கடலோரத்தில் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,846,909 ஆக இருந்தது; சனவரி 2014இல் வெளியிடப்பட்ட அலுவல்முறை மதிப்பீடுகளில் இது 5,098,790ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் தலைநகரமாக படாங் உள்ளது.
மேற்கு சுமாத்திரா
சுமாத்திரா பரத் سومترا بارت | |
---|---|
குறிக்கோளுரை: துவா சகத்தோ (மினாங்கோபோ) (ஒன்றுகூடி வளமை) | |
இந்தோனேசியாவில் மேற்கு சுமாத்திராவின் அமைவிடம் | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணத் தலைநகரம் | படாங் |
அரசு | |
• ஆளுநர் | இர்வான் பிராயிட்னோ (பிகேஎசு) |
• துணை ஆளுநர் | முசுலிம் காசிம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 42,012.89 km2 (16,221.27 sq mi) |
மக்கள்தொகை (2014 மதிப்பீடு) | |
• மொத்தம் | 50,98,790 |
• அடர்த்தி | 120/km2 (310/sq mi) |
Demographics | |
• இனக் குழு | மினாங்காபோ (88%), படாக் (4%), சாவா மக்கள் (4%), மென்டாவாய் (1%), பிறர் (3%)[1] |
• சமயம் | இசுலாம் (97.4%), கிறித்தவர் (2.2%), இந்து சமயம் (0.35%), பௌத்தம் (0.06%) |
• மொழி | இந்தோனேசிய மொழி, மினங்காபோ, மென்டாவாய் |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் (UTC+7) |
இணையதளம் | www.sumbarprov.go.id |
இதன் வடக்கே வடக்கு சுமாத்திரா மாகாணமும் கிழக்கில் ரியாவு மற்றும் ஜம்பி மாகாணமும் தென்கிழக்கில் பெங்குலு மாகாணமும் உள்ளன. இந்தியப் பெருங்கடலில் உள்ள மென்டாவாய் தீவுகள் இந்த மாகாணத்தைச் சேர்ந்தவை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.