கிள்ளான் துறைமுகம்
மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் துறைமுக நகரம் / From Wikipedia, the free encyclopedia
கிள்ளான் துறைமுகம் அல்லது கோலக்கிள்ளான் (மலாய்: Pelabuhan Klang; ஆங்கிலம்: Port Klang; சீனம்: 巴生港); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு துறைமுக நகரம். கடல் வழியாகத் தீபகற்ப மலேசியாவுக்குள் செல்வதற்கான முக்கிய நுழைவாயிலாகத் திகழ்கின்றது.[1]
விரைவான உண்மைகள் கிள்ளான் துறைமுகம், நாடு ...
கிள்ளான் துறைமுகம் | |
---|---|
Port Klang | |
ஆள்கூறுகள்: 3°0′0″N 101°24′0″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | கிள்ளான் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 573 km2 (221 sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 42000 |
தொலைபேசி எண் | +60-3 |
போக்குவரத்துப் பதிவெண் | B |
இணையதளம் | http://www.pka.gov.my |
மூடு
பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில் போர்ட் சுவெட்டன்காம் (Port Swettenham) என்று அறியப்பட்டது. 1972 சூலை மாதம், கிள்ளான் துறைமுகம் என பெயர் மாற்றம் கண்டது.