செரி மெனாந்தி
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரச தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
செரி மெனாந்தி அல்லது ஸ்ரீ மெனாந்தி (மலாய்; ஆங்கிலம்: Seri Menanti; சீனம்: 斯里·梅南蒂; ஜாவி: سري مننتي; நெகிரி செம்பிலான் மலாய்: (Soghi Monanti) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கோலா பிலா மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம் ஆகும். மாநிலத் தலைநகரான சிரம்பான் நகருக்கு கிழக்கே 33 கி.மீ. தொலைவிலும் கோலா பிலா நகருக்கு தென்மேற்கே 14 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் செரி மெனாந்தி Soghi Monanti, நாடு ...
செரி மெனாந்தி
Soghi Monanti | |
---|---|
Seri Menanti Bandar Diraja Seri Menanti அரச நகரம் | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°41′51″N 102°09′30″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | கோலா பிலா |
லுவாக் | குனோங் பாசிர், செம்போல், தெராச்சி, இனே, உலு மூவார் |
நிறுவல் | 15-ஆம் நூற்றாண்டு |
அரச நகரம் | 1773 |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,610 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 71550 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 06988 0000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
மூடு
இந்த நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரச தலைநகரம்; மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரச தலைவர் யாங் டி பெர்துவான் பெசார் அல்லது நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளரான யாம் துவான் பெசார் இருப்பிடத்தைக் கொண்டுள்ளது. இந்த அரச அரண்மனை இசுதானா பெசார (Istana Besar) என்று அழைக்கப்படுகிறது.[2]