வயநாடு மாவட்டம்
கேரளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
வயநாடு (வயல்நாடு) மாவட்டம் இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு இது 1980-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் திகதி கேரளாவின் 12-ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இப்பகுதி முற்காலத்தில் மாயாசேத்திரம் என அழைக்கப்பட்டதாக பழைய குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. இது மருவி வயநாடு ஆனதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், உள்ளூர் மக்கள் நடுவில் நிலவும் கருத்துக்களின்படி வயல்கள் நிறைந்த நாடு என்னும் பொருளிலேயே வயநாடு என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்பகுதியில் பல பழங்குடியினர் வாழ்ந்துவருகின்றனர். இது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 700 தொடக்கம் 2100 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.[8]
விரைவான உண்மைகள் வயநாடு மாவட்டம் വയനാട് ജില്ല (மலையாளம்)வயல்நாடு மாவட்டம், நாடு ...
வயநாடு மாவட்டம்
வயல்நாடு மாவட்டம் | |
---|---|
மேலிருந்து கடிகார திசையில்: செம்பரா மலைமுடி, வயநாடு வனவிலங்கு காப்பகம், சுல்தான் பத்தேரியில் உள்ள வணிக வளாகம், நெல் வயல், காராப்புழா அணையின் நுழைவாயில், எடக்கல் குகைகள். | |
சொற்பிறப்பு: வயல் நாடு: நெல் வயல் நிலம்[1] | |
குறிக்கோளுரை: "Way Beyond"[2] | |
கேரளத்தில் இருப்பிடம் | |
ஆள்கூறுகள் (கல்பற்றா): 11.605°N 76.083°E / 11.605; 76.083 | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கேரளம் |
பகுதி | வடக்கு கேரள |
நிறுவப்பட்டது | 1980 நவம்பர் 1; 43 ஆண்டுகள் முன்னர் (1-11-1980) |
தோற்றுவித்தவர் | கேரள அரசு |
தலைமையிடம் | கல்பற்றா |
வட்டம் | மானந்தவாடி சுல்தான் பத்தேரி வைத்திரி |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திருமதி. ஏ.கீதா, இ.ஆ.ப.[3] |
• மாவட்ட காவல்துறை தலைவர் | திரு. ஆர்.ஆனந்த், இ.கா.ப.[4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,130 km2 (820 sq mi) |
உயர் புள்ளி | 2,240 m (7,350 ft) |
தாழ் புள்ளி (சாலிப்புழா ஆறு, மலப்புறம் எல்லை) | 108 m (354 ft) |
மக்கள்தொகை (2018)[5] | |
• மொத்தம் | 8,46,637 |
• அடர்த்தி | 397/km2 (1,030/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 670 xxx, 673 xxx |
தொலைபேசி குறியீடு[6] | +91—
|
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
வாகனப் பதிவு | KL-12 கல்பற்றா, KL-72 மானந்தவாடி, KL-73 சுல்தான் பத்தேரி |
ம.மே.சு. (2005) | 0.753[7] ( உயர்) |
இணையதளம் | wayanad |
மூடு