சேக் அசீனா
From Wikipedia, the free encyclopedia
சேக் அசீனா வாசித் (Sheikh Hasina Wazed, வங்காள மொழி: শেখ হাসিনা ওয়াজেদ, பிறப்பு: செப்டம்பர் 28, 1947) என்பவர் வங்காளதேச அரசியல்வாதியும் 2009ஆம் ஆண்டு முதல் இவர் வங்காளதேசத்தின் பிரதமராக இருப்பவரும் ஆவார். இவர் 1996 முதல் 2001 வரையான கால பகுதியிலும் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். மேலும் இவர் வங்காளதேசத்தின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். 1981 இலிருந்து வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவருகிறார். இவர் வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவர் ஆவார்.
விரைவான உண்மைகள் மாண்புமிகுசேக் அசீனா வாசிட்শেখ হাসিনা ওয়াজেদ, வங்காளதேசத்தின் 10வது பிரதமர் ...
மாண்புமிகு சேக் அசீனா வாசிட் শেখ হাসিনা ওয়াজেদ | |
---|---|
வங்காளதேசத்தின் 10வது பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 6 சனவரி 2009 | |
குடியரசுத் தலைவர் | இஜூதின் அகமது சில்லூர் இரகுமான் அப்துல் அமீது |
முன்னையவர் | பக்குருதின் அகமது (இடைக்காலம்) |
பதவியில் ஜூன் 23, 1996 – ஜூலை 15, 2001 | |
குடியரசுத் தலைவர் | சகாபுதீன் அகமது |
முன்னையவர் | ஹபிபுர் ரகுமான் (இடைக்காலம்) |
பின்னவர் | லத்திபுர் ரகுமான் (இடைக்காலம்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 28, 1947 (1947-09-28) (அகவை 76) கோபால்கஞ்ச், கிழக்கு பாகிஸ்தான் (தற்கால வங்காளதேசம்) |
அரசியல் கட்சி | அவாமி லீக் |
மூடு