மட்டக்களப்பு மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
மட்டக்களப்பு மாவட்டம் (Batticaloa district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு நகரம் இதன் தலைநகரமாகும். மட்டக்களப்பு மாவட்டம் 3 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 346 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[4]
விரைவான உண்மைகள் மட்டக்களப்பு மாவட்டம் Batticaloa Districtමඩකලපුව දිස්ත්රික්කය, நாடு ...
மட்டக்களப்பு மாவட்டம் Batticaloa District මඩකලපුව දිස්ත්රික්කය | |
---|---|
நிருவாக மாவட்டம் | |
கும்புறுமூலையில் ஞாயிறு மறைவு | |
இலங்கையில் அமைவிடம் | |
நிருவாக அலகுகள் (2007) | |
ஆள்கூறுகள்: 07°50′N 81°20′E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
தலைநகர் | மட்டக்களப்பு |
பிசெ பிரிவு | |
அரசு | |
• மாவட்டச் செயலாளர் | மாணிக்கம் உதயகுமார் |
• நா.உகள் | List
|
• மா.ச.உறுப்பினர்கள் | List
|
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 2,854 km2 (1,102 sq mi) |
• நிலம் | 2,610 km2 (1,010 sq mi) |
• நீர் | 244 km2 (94 sq mi) 8.55% |
பரப்பளவு தரவரிசை | 9-வது (4.35%) |
மக்கள்தொகை (2012 கணக்கெடுப்பு)[2] | |
• மொத்தம் | 5,25,142 |
• தரவரிசை | 17-வது (2.59%) |
• அடர்த்தி | 180/km2 (480/sq mi) |
இனம்(2012 கணக்கெடுப்பு)[2] | |
• இலங்கைத் தமிழர் | 381,285 (72.61%) |
• சோனகர் | 133,844 (25.49%) |
• சிங்களவர் | 6,127 (1.17%) |
• பரங்கியர் | 2,794 (0.53%) |
• ஏனையோர் | 1,092 (0.21%) |
சமயம்(2012 கணக்கெடுப்பு)[3] | |
• இந்து | 338,983 (64.55%) |
• முசுலிம் | 133,939 (25.51%) |
• கிறித்தவம் | 46,300 (8.82%) |
• பௌத்தம் | 5,787 (1.10%) |
• ஏனையோர் | 133 (0.03%) |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+05:30) |
அஞ்சல் குறியீடு | 30000-30999 |
தொலைபேசி | 065 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | LK-51 |
வாகனப் பதிவு | EP |
அதிகாரபூர்வ மொழிகள் | தமிழ், சிங்களம் |
இணையதளம் | மட்டக்களப்பு மாவட்ட செயலகம் |
மூடு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு ஏறத்தாழ 2633.1 சதுர கிலோமீட்டர் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே திருகோணமலை மாவட்டம், வடமேற்கே பொலன்னறுவை மாவட்டம், தெற்கு மற்றும் தென்மேற்கே அம்பாறை மாவட்டம், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவை உள்ளன.
இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழரும், அடுத்தபடியாக முஸ்லிம்களும், பின்னர் பரங்கியரும் வாழ்கின்றனர்.