குசராத்து மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
அகமதாபாத் (குசராத்தி: અમદાવાદ, சிந்தி மொழி: ا د آ ڡڢګڪا, Ahmedabad) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும், இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமுமாகும். இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இந்நகரம் இதன் பழைய பெயரான கர்ணாவதி என்ற பெயராலும் குசராத்து மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது. இது அகமதாபாத் மாவட்டத்தின் தலைநகரமாகும்.
அகமதாபாத் | |
---|---|
அம்தாவத் | |
குஜராத்தில் அகமதாபாத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 23.0225°N 72.5714°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | அகமதாபாத் |
அமைப்பு |
|
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | அகமதாபாத் மாநகராட்சி |
• காவல் துறை ஆணையர் | ஜி.எசு. மாலிக்கு[1] |
பரப்பளவு | |
• மாநகரம் | 505.00 km2 (194.98 sq mi) |
• நகர்ப்புறம் | 1,866 km2 (720 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 1-ஆவது (குசராத்தில்) |
ஏற்றம் | 69.65 m (228.51 ft) |
மக்கள்தொகை (2011)[6] | |
• மாநகரம் | 56,33,927 |
• தரவரிசை | 5-ஆவது |
• அடர்த்தி | 11,000/km2 (29,000/sq mi) |
• நகர்ப்புறம் | 63,57,693 |
இனங்கள் | அகமதாபாத் அம்தாவாடி (குஜராத்தி) |
மொழி | |
• ஆட்சி | குஜராத்தி |
• கூடுதல் ஆட்சி மொழி | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 3800xx |
இடக் குறியீடு | +9179xxxxxxxx |
வாகனப் பதிவு | GJ-01 (மேற்கு), GJ-27 (கிழக்கு), GJ-38 பாவ்லா (ஊரகம்)[8] |
பாலின விகிதம் | 1.11[9] ♂/♀ |
படிப்பறிவு விகிதம் | 89.62[6] |
பெருநகர மொ.உ.உ. | $70 billion |
இணையதளம் | ahmedabadcity |
மூலம்: இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.[10] |
இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குசராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குசராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர், குசராத்தின் தலைநகராக காந்தி நகர் ஏற்கப்பட்டது. அகமதாபாது இந்தியாவின் முதன்மையான தொழில் நகராக உள்ளது. இதன் மக்கள்தொகை விரைவாக உயர்ந்துவருகிறது. இதனால் வீடுகளுக்கான தேவை அதிகரித்து கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலமாக விண்ணைத்தொடும் கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன.[11]
அகமதாபாது நகரம் பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டில் அகமத் ஷாவால் உருவாக்கப்பட்டது. அவர் இதை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். இந்த நகர் இந்திய-முகலாயக் கட்டிடக் கலைக்கும், இந்து-முஸ்லிம் கவின் கலைக்கும் உதாரணமாகத் திகழ்கிறது. மேலும் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்றும் இந்த நகரத்தில் புழக்கத்தில் உள்ளன. இந்தக் காரணங்களுக்காக இந்த நகரம் பாரம்பரிய நகரமாக யுனெசுகோவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அகமதாபாது மாநகராட்சி இந்த நகரத்தில் 2,600 பாரம்பரியக் கட்டிடங்கள் உள்ளன எனக் கண்டறிந்துள்ளது. இங்கு ஜாமி மசூதி, சர்கேஜ் ரோஸா, சுவாமி நாராயண் கோயில், சந்தை நுழைவு வாயில், காந்தி ஆஸ்ரமம், அடலாஜ் தெப்பக்குளம் உள்ளிட்ட 54 மரபுச் சின்னங்களை உள்ளாட்சி நிர்வாகம் தற்போது பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் பாதுகாக்க புதிய அங்கீகாரம் உதவும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது.[12]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அகமதாபாது மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 55,77,940 ஆகும். அதில் ஆண்கள் 2,938,985 மற்றும் 2,638,955 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,21,034 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.29% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 45,94,895 (81.56%), இசுலாமியர் 7,60,920 (13.51%), சமணர்கள் 2,03,739 (3.62%), கிறித்தவர்கள் 47,846 (0.85%) மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[13] இந்நகரத்தில் பெரும்பான்மையோர் குசராத்தி மொழி பேசுகின்றனர்.
அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ் பேருந்து போக்குவரத்து வசதி இந்நகரத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகைப் பேருந்துகளில் நாள்தோறும் 1,32,000 பயணிகள் பயணிக்கின்றனர்.[14]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.