கூட்டரசு சாலை 3 (மலேசியா)
மலேசிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் இயங்கும் ஒரு முக்கிய மலேசிய கூட்டாட்சி சாலை / From Wikipedia, the free encyclopedia
கூட்டரசு சாலை 3 அல்லது கூட்டரசு சாலை 3 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 3 அல்லது Federal Route 3; மலாய்: Laluan Persekutuan Malaysia 3 அல்லது Jalan Persekutuan 3) என்பது மலேசிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் இயங்கும் ஒரு முக்கிய மலேசிய கூட்டரசு சாலை அமைப்பாகும்.
கூட்டரசு சாலை 3 | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
ஆசிய நெடுஞ்சாலை இன் பகுதி | |
நீளம்: | 739.06 km (459.23 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1866[1] – present |
வரலாறு: | கட்டி முடிக்கப்பட்டது 1962[2] |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | ரந்தாவ் பாஞ்சாங், கிளாந்தான் |
சாலைகள் சுகூடாய் நெடுஞ்சாலை | |
தெற்கு முடிவு: | ஜொகூர் பாரு, ஜொகூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
739 கிலோமீட்டர்கள் (459 mi) நீளம் கொண்ட இந்தச் சாலை (தாய்லாந்து] எல்லைப் பகுதியின் கிளாந்தான், ரந்தாவ் பாஞ்சாங் நகரத்தில் தொடங்கி ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு நகரம் வரை தொடர்கிறது.[3][4]
இந்த நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் உள்ள இயற்கைக் காட்சிகள் காரணமாக, இந்தச் சாலை மலேசியா மற்றும் ஆசியாவின் சிறந்த கடற்கரைச் நெடுஞ்சாலைகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தவிர இந்தச் சாலை ஆசியாவின் முதல் 10 கடலோர நெடுஞ்சாலைகளில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது.[5][6]