83ஆவது அகாதமி விருதுகள்
From Wikipedia, the free encyclopedia
83ஆவது அகாதமி விருதுகள் (ஆங்கில மொழி: 83rd Academy Awards) விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS), ஆல் ஒருங்கிணைக்கப்பட்டது, 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு நடத்தப்பட்டது. பிப்ரவரி 27, 2011 அன்று கோடாக் திரையரங்கம், ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ் இல் 17:30 ப.நே.வ. (20:30 கி.நே.வ) நடந்தது.[6][7] நடிகர்கள் ஜேம்ஸ் பிரான்கோ மற்றும் ஆன் ஹாத்வே (நடிகை) முதன்முறையாக இவ்விழாவினை நடத்தினர்.[8]
83-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
சுவரொட்டி | ||||
திகதி | பிப்ரவரி 27, 2011 | |||
இடம் | கோடாக் திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | ஜேம்ஸ் பிரான்கோ ஆன் ஹாத்வே[1] | |||
முன்னோட்டம் | டிம் கன் மரியா மெனவுனசு ராபின் ராபர்ட்சு கிறிசுடா சுமித்[2] | |||
தயாரிப்பாளர் | புரூசு கோஹென் டான் மிஷ்சர்[3] | |||
இயக்குனர் | டான் மிஷ்சர்[3] | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | தி கிங்ஸ் ஸ்பீச் | |||
அதிக விருதுகள் | இன்செப்சன் மற்றும் தி கிங்ஸ் ஸ்பீச் (4) | |||
அதிக பரிந்துரைகள் | தி கிங்ஸ் ஸ்பீச் (12) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
கால அளவு | 3 மணிநேரம், 16 நிமிடங்கள்[4] | |||
மதிப்பீடுகள் | 37.9 மில்லியன் 21.2% (நீல்சன் மதிப்பீடுகள்)[5] | |||
|
இன்செப்சன் மற்றும் தி கிங்ஸ் ஸ்பீச் நான்கு விருதுகளை வென்றன. தி கிங்ஸ் ஸ்பீச் சிறந்த திரைப்பட விருதினை வென்றது.[9][10][11] த சோசியல் நெட்வொர்க் மூன்று விருதுகளையும், அலிஸ் இன் வொண்டர்லேண்ட், த ஃபைட்டர், மற்றும் டாய் ஸ்டோரி 3 இரண்டு விருதுகளையும், மற்றும் பிளாக் ஸ்வான், காட் ஆஃப் லவ், இன் எ பெட்டர் வெர்ல்டு, இன்சைடு ஜாப், த லாஸ்ட் திங், ஸ்டிரேங்ஜர்சு நோ மோர், மற்றும் த வுல்ஃப்மேன் ஒரு விருதினை வென்றன.